AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. நாளை காலை சிறப்பு ரயில் முன்பதிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

Diwali Special Trains Announced : தீபாவளியையொட்டி, சென்னையில் இருந்து கன்னியாகுமரி மற்றும் தாம்பரத்தில் இருந்து தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை செவ்வாய்க்கிழமை காலை தொங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த முழு விவரத்தை பார்க்கலாம்.

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. நாளை காலை சிறப்பு ரயில் முன்பதிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!
கோப்புப்படம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Nov 2026 14:29 PM IST

தமிழகத்தில் வருகிற நவம்பர் 8- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர்களில் வசித்து வரும் ஏராளமான பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் மேலும் சில சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன. இதில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கும், தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

சென்னை டூ கன்னியாகுமரிக்கு சிறப்பு ரயில்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து கன்னியாகுமரி ரயில் நிலையத்துக்கு ஒரு வழி மட்டும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ( வண்டி எண்: 06151) நவம்பர் 5- ஆம் தேதி ( வியாழக்கிழமை) இரவு சுமார் 11.50 மணிக்கு இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:15 மணிக்கு கன்னியாகுமரி ரயில் நிலையத்தை சென்றடையும். இதே போல, கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்துக்கு ஒரு வழி பாதையாக சூப்பர் பாஸ்ட் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ( வண்டி எண்:- 06152), நவம்பர் 9- ஆம் தேதி ( திங்கள்கிழமை) இரவு சுமார் 11: 20 மணிக்கு புறப்படுகிறது.

மேலும் படிக்க: மதுராந்தகத்தில் அடுத்தடுத்து மோதிய 3 அரசுப் பேருந்துகள்.. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தால் போக்குவரத்து பாதிப்பு!

தாம்பரம் டூ தென்காசிக்கு சிறப்பு ரயில்

இந்த ரயிலானது கன்னியாகுமரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை சென்றடையும். தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென்காசி ரயில் நிலையத்துக்கு சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ( வண்டி எண்:- 06049) நவம்பர் 7- ஆம் தேதி ( சனிக்கிழமை) காலை 5 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு, அதே நாள் மாலை 4:45 மணிக்கு தென்காசி ரயில் நிலையத்தை சென்றடையும்.

செங்கோட்டை டூ  தாம்பரத்துக்கு சிறப்பு ரயில்

இதே போல, செங்கோட்டை தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ( வண்டி எண்: 06050) நவம்பர் 9- ஆம் தேதி ( திங்கள் கிழமை) மாலை 3 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை செவ்வாய்க்கிழமை ( நவம்பர் 3- ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் படிக்க: 1.15 மணி நேரத்தில் சென்னை டூ பெங்களூரூ பயணம்.. அதிவேக புல்லட் ரயில் திட்டம்.. மத்திய அரசு ஒப்புதல்!!

Follow Us