AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

புதிய தலைமை செயலகம்.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு.. பட்டினப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?

Pattinapakkam New Secretariat Construction : பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டுவதற்கான சர்வே எண்ணில் உள்ள இடத்தில் அமைந்திருக்கும் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. இதனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

புதிய தலைமை செயலகம்.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு.. பட்டினப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?
கோப்புப்படம்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Nov 2026 15:10 PM IST

சென்னையில் செயல்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்தில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதிய தலைமை செயலகம் கட்டப்படும் என்று சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அந்த பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இதன் காரணமாக புதிய தலைமை செயலகம் கட்டும் திட்டம் கைவிடப்படலாம் என்றும், மாற்று இடங்களை அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், பட்டினப்பாக்கத்தில் அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் இடம்பெற்றுள்ள வீட்டு வசதி வாரியத்தின் பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பழைய குடியிருப்புகளை இடித்து அகற்ற டெண்டர்

இதன் காரணமாக புதிய தலைமை செயலகம் அமையும் இடத்தில் உள்ள சேதமடைந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிப்பதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 3.82 ஏக்கரில் அமைந்துள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிப்பதற்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் டெண்டர் கோரியுள்ளது. இதன் காரணமாக பட்டினபாக்கத்தில் புதிய தலைமை செயலகம் அமைக்கப்பட இருப்பதாகவும், மாற்றிய இடம் தேர்வு செய்யப்படவில்லை என்றும் தெரிகிறது.

மேலும் படிக்க: அலையாத்தி காடுகளுக்கு கூட்டம் கூட்டமாக படை எடுக்கும் வெளிநாட்டு பறவைகள்.. உற்சாகமாக கண்டுகளிக்கும் சுற்றுலா பயணிகள்!

ரூ.1,200 கோடியில் புதிய தலைமை செயலகம்

தற்போதைய தலைமைச் செயலக கட்டிடத்தில் முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அறைகள் போதிய இடவசதி இல்லாமல் இருப்பதாகவும், எதிர்காலத்தில் பயன்படுத்தும் வகையில் பட்டினப்பாக்கத்தில் கடல் அழகு தெரியும் வகையில் ரூ. 1,200 கோடியில் பிரம்மாண்டமாக புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு அதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்டினம் பாக்கம் பகுதிகளில் வசித்து வரும் முள்ளிக்குளம், மயிலை, முள்ளிமா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து சபைகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பட்டினப்பாக்கம் விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு

அத்துடன், புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு எதிராகவும், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராகவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதனால், புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் திட்டத்தில் அரசு பின் வாங்கியதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புதிய தலைமை செயலகம் கட்டப்படுமா இல்லையா என்று தொடர்ந்து கேள்விகள் எழுந்து வரும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டுவதற்காக அரசு வெளியிட்ட சர்வே எண்ணில் அமைந்துள்ள பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றுவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் தீவிரம்.. கடைகளை திறக்க தற்காலிக ஊழியர்களை நியமிக்க திட்டம்!

Follow Us