ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!
DMK Complaint Against Minister Rajmohan : இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி தருவதாக பேரம் பேசிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்பு துறையில் திமுக புகார் அளித்தது.
தமிழக இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ஒருவர் ரூ. 5 கோடி லஞ்சம் தருவதாக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி கூறியதை பொது நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தது தொடர்பாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவின் வழக்கறிஞர் பிரிவு பரந்தாமன் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அந்த விவகாரம் தொடர்பான விரிவான தகவல் பின் வருமாறு: சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியக அரங்கத்தில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்நாடு நாள் நேற்று ஞாயிற்றுக்கிழமை ( நவம்பர் 1- ஆம் தேதி) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பங்கேற்ற பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவியை தனக்கு அளித்தால் ரூ.5 கோடி தருவதாக ஒருவர் கூறியுள்ளார்.
இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம்
அதனை தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி தன்னிடம் வந்து கூறினார். அதற்கு நான் தளபதியின் வாரிசுகள் 500 கோடி கொடுத்தாலும் பணம் பெற்றுக் கொண்டு பதவி வழங்க மாட்டேன். அந்த பதவி உரிய நபருக்கு தான் வழங்கப்படும் என்று கூறியதாக பேசி இருந்தார். அத்துடன், யாரிடமும் ஒரு ரூபாய் கூட லஞ்சம் வாங்காமல் இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு தகுதியானவரான நாட்டுப்புற பாடகர் புஷ்பவனம் குப்புசாமி நியமிக்கப்பட்டார் என்று தெரிவித்திருந்தார்.




மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம்.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு.. பட்டினப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?
லஞ்ச ஒழிப்பு எஸ்.பி.யிடம் திமுக புகார்
இந்த நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த கருத்தை மையமாக வைத்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளரிடம் திமுகவின் வழக்கறிஞர் பிரிவு பரந்தாமன் பரபரப்பு புகாரை அளித்துள்ளார். அதில், இயல், இசை, நாடக மன்ற தலைவர் பதவிக்கு ரூ. 5 கோடி லஞ்சம் தருவதாக ஒருவர் கூறியதை குறிப்பிட்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை ஆதாரமாகக் கொண்டு ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு ₹5 கோடி லஞ்ச பேரம் – அமைச்சர் ராஜ்மோகன் பரபரப்பு குற்றச்சாட்டு.
#TamilNaduPolitics #Rajmohan #EyalIsaiNatakaMandram #BribeAllegation #TNGovt #ViralVideo #Chennai #TamilNews #அரசியல்சர்ச்சை #தமிழ்நாடுசெய்திகள் #TNCTamil #TheNewsCircle #TNCTamilNews
https://t.co/ky4jA1eS5e
— The News Circle – Tamil (@tnctamilnews) November 2, 2026
எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
இதனிடையே, ரூ.5 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு ஒருவர் முன் வந்தும் அவர் மீது ஊழல் தடுப்பு போலீசார் மூலமாக நடவடிக்கை எடுக்காமல், அதனை மேடையில் பேசியது ஏன் எனவும், அமைச்சர் ராஜ்மோகன் மீதும் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் ரூ. 5 கோடி தருவதாக கூறியது யார் என்பதையும், ஏன் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் ராஜ்மோகன் தெளிவுபடுத்த வேண்டும். அமைச்சர்கள் தனது பொறுப்பை உணர்த்தும் உணர்ந்து பேசுவது அவசியம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!