AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

முடிவுக்கு வந்தது கராத்தே பாபு படத்தின் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?

Karathey Babu Movie Censor Update | நடிகர் ரவி மோகன் நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் உருவாகி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் முன்னதாக ரவி மோகன் நடிப்பில் உருவான கராத்தே பாபு படத்தின் ரிலீஸ் எப்போது இருக்கும் என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது.

முடிவுக்கு வந்தது கராத்தே பாபு படத்தின் சென்சார் பிரச்சனை… ரிலீஸ் எப்போது?
கராத்தே பாபுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Nov 2026 17:30 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Ravi Mohan). இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நாயகனாக ஹிட் படங்களை கொடுத்து வந்த நடிகர் ரவி மோகன் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என்ற அவதாரங்களையும் எடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் அன் ஆர்டினரி மேன் என்ற படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக நடிகர் யோகி பாபு நடித்து உள்ளார். மேலும் ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படங்களை தயாரிக்கவும் செய்கிறார் ரவி மோகன். தொடர்ந்து இந்தப் படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி வருகின்றது.

அது மட்டும் இன்றி நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவான படங்கள் வரிசையாக வெளியீட்டிற்கு காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி உள்ள கராத்தே பாபு படம் தொடர்பான தகவல்கள் தற்போது சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முடிவுக்கு வந்தது கராத்தே பாபு படத்தின் சென்சார் பிரச்சனை:

அதன்படி சினிமா வட்டாரங்களில் வெளியான தகவலில், ரவி மோகனின் வரவிருக்கும் திரைப்படமான கராத்தே பாபு முதலில் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும், தணிக்கை சோதனையின் போது இப்படம் சில சிக்கல்களைச் சந்தித்ததாகக் கூறப்படுகிறது. தணிக்கை வாரியம், குறிப்பிட்ட அரசியல்வாதி மற்றும் தற்போதைய அரசியல் பிரமுகர்களைக் குறிப்பதாகக் கருதப்பட்ட சில காட்சிகளுக்கு ஆட்சேபனை தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, இப்படம் மறுஆய்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட இந்தத் தாமதம், படத்தின் ஆரம்ப வெளியீட்டுத் திட்டங்களைப் பாதித்தது. தற்போது, ​​மறுஆய்வுக் குழு படத்தைப் பார்த்து தணிக்கை சான்றிதழ் கிடைப்பதற்கான வழியைச் சீரமைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படக்குழுவினருக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. நவம்பர் மாதத்தில் ஏற்கனவே பல படங்கள் வெளியாகவிருப்பதால், தயாரிப்பாளர்கள் டிசம்பர் 2026-ல் பட வெளியீட்டிற்கு ஏற்ற காலத்தைத் தேடி வருகின்றனர்.

Also Read… பிக்பாஸில் அக்‌ஷிதாவை கேள்விகளால் பொளந்து எடுக்கும் விஜய் சேதுபதி – வெளியானது புரோமோ வீடியோ!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… வெளியானது சூர்யாவின் சீன் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி மொழி ட்ரெய்லர்!

Follow Us