AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Janhvi Kapoor: என்ன சொல்வதென்றே தெரியல.. பெடி பட தனது கதாபாத்திரத்தின் மீது எழுந்த விமர்சனம் குறித்து ஜான்வி கபூர் ஓபன்!

Janhvi Kapoor Addresses Character Controversy: பாலிவுட் சினிமாவில் முன்னணி ஸ்டார் நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் ஜான்வி கபூர். இவர் தெலுங்கு சினிமாவிலும் படங்களில் பணியாற்றிவருகிறார். இறுதியாக ராம் சரணுடன் பெடி படத்தில் நடித்திருந்த நிலையில், அவரின் கதாபாத்திரம் விமர்சனகளுக்குள்ளானது. தற்போது அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Oct 2026 14:52 PM IST
இந்தி சினிமாவில் இளம் நடிகையாக மக்கள் மத்தியில் பேமஸானவர் நடிகை ஜான்வி கபூர். இவர் தமிழ் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஆவார். இவர் தனது தாயை போலவே சினிமாவில் முன்னேறவேண்டும் என எண்ணிய நிலையில், தற்போது சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்திவருகிறார்.

1 / 5
நடிகை ஜான்வி கபூர், கடந்த 2018ம் ஆண்டில் வெளியான தடக் என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானார். இதன் பிறகு கோஷ்டி ஸ்டோரி, குஜன் சக்சேனா, ரோஹி மிலி உள்ளிட்ட பேக் டூ பேக் இந்தி திரைப்படங்களில் நாயகியாக நடித்து பேமஸானார்.

2 / 5
இதன் பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிக்க ஆர்வம் காட்டிய நிலையில், தெலுங்கு சினிமாவில் நுழைந்தார். ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாக கடந்த 2024ம் ஆண்டில் வெளியான தேவரா பார்ட் 1 படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

3 / 5
இப்படத்திற்கு பின் இவர் இரண்டாவதாக நடித்திருந்த தெலுங்கு திரைப்படம் பெடி. இயக்குநர் புச்சி பாபு சனாவின் இயக்கத்தில், ராம் சரணுக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடித்திருந்தார். இதில் இவர் நடித்திருந்த ஆச்சியம்மா என்ற கதாபாத்திரம் சர்ச்சை மற்றும் பெண்ணியம் தொடர்பான விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது குறித்து சமீபத்தில் நேர்காணலில் தனது கருத்தை ஜான்வி கூறியுள்ளார்.

4 / 5
சமீபத்தில் நேர்காணலில் பேசிய ஜான்வி கபூர், பெடி படத்திற்காகப் பலரும் மிகவும் கடினமாக உழைத்தார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது கதாபாத்திரத்திற்கு நான் பொறுப்பேற்பது முக்கியம். என்னால் செய்யக்கூடிய ஒரே விஷயம், மீண்டும் அதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடிக்காமல் இருப்பதை உறுதி செய்வதுதான் என கூறியிருந்தார்.

5 / 5
Follow Us