AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

Chennai Rowdy Arrested : சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டு வரும் அரசு பேருந்தின் இருக்கையின் பின்புறம் எழுத்தப்பட்டிருந்த அதிர்ச்சி வாசகம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து ரவுடி ஒருவரை கைது செய்தனர். அவர் எதற்ககாக இத்தகைய வாசகத்தை எழுதினார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!
கைதான ரவுடி. பேருந்தில் இருந்த அதிர்ச்சி வாசகம்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 29 Oct 2026 15:40 PM IST

சென்னையில் உள்ள ரவுடிகள் தங்களுக்குள் இருக்கும் பகையை தீர்த்துக் கொள்வதற்காக தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாகும். அதன்படி, பழிக்கு பழியாக ஒருவரை ஒருவர் கொலை செய்வதற்கு திட்டம் தீட்டி கொலை சம்பவங்களை அரங்கேற்றியுள்ளனர். அத்துடன் தங்களுக்கு எதிரியாக இருக்கும் ரவுடிகள் குறித்த தவறான தகவல்களையும், குற்ற சம்பவங்கள் குறித்தும் போலீசுக்கு தகவல் தெரிவித்து மாட்டி விடுவதும் நடந்து வருகிறது. இதனால் ஏற்படும் பகை காரணமாக அடிதடி சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. இப்படியாக தங்களது எதிரிகளை காலி செய்வதற்கு பல்வேறு ஐடியாக்களை பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த ரவுடி ஒருவர் தனது எதிரியை மாட்டி விடுவதற்காக மாநகர பேருந்தில் சர்ச்சைக்குரிய வாசகத்தை பதிவிட்டு இருந்தார்.

ரவுடியை மாற்றி விட மற்றொரு ரவுடி செய்த செயல்

அதில், அரிவாள் படத்தை வரைந்து கொலை செய்ய வேண்டுமா. என்னை அழையுங்கள் என்று எழுதி எதிரியின் செல்போன் நம்பரையும் பதிவிட்டு இருந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதுடன், அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சென்னை மாநகரத்தில் இயக்கப்பட்டு வரும் மாநகர பேருந்து ஒன்றில் இருக்கையின் பின்புறம் மேற்கண்டவாறு ஒரு அதிர்ச்சி வாசகம் எழுதப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: திருச்சி விமான நிலையத்தில் அதிர்ச்சி.. பயணி உடைமையில் நெளிந்த உயிரினம்.. டிஆர்ஐ அதிகாரிகள் ஷாக்!

பேருந்தில் எழுதப்பட்டிருந்த அதிர்ச்சி வாசகம்

அதில், விச்சி வியாசர்பாடி ரவுடி கொலை செய்ய வேண்டுமென்றால் நம்பரை தொடர்பு கொள்ளுங்கள் என குறிப்பிடப்பட்டு, அதில், செல்போன் எண்ணும் எழுதப்பட்டிருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதை அறிந்த எம். கே. பி. போலீசார் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அத்துடன், அந்த வாசகத்தில் இடம் பெற்ற செல்போன் எண்ணுக்கு போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது, எதிர் திசையில் வடசென்னை பகுதியை சேர்ந்த விக்கி என்பவர் பேசினார்.

வியாசப்பாடியை சேர்ந்த ரவுடி கைது

அந்த எண் அவருடையது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, என்னுடைய செல்போன் எண்ணை நானே எப்படி பொதுவெளியில் எழுதி இருப்பேன். அதுவும் கொலை செய்வதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று யாராவது செல்போன் நம்பரை எழுதி இருப்பார்களா என்று தெரிவித்தார். அதன்படி, போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வியாசர்பாடி, தாமோதரன் நகரை சேர்ந்த ஜாகிர் உசேன் என்ற ரவுடி இத்தகைய செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 10 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சோப்பு- ஷாம்புவால் ஆற்றில் நுரையா? அமைச்சர் பொறுப்பற்று பேசலாமா? நறுக் குட்டு வைத்த தவாக வேல்முருகன்!

Follow Us