AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!

Prisons Department DGP Sandeep Rai Rathore : சென்னை மற்றும் தேனி சிறையில் இருந்து கைதிகள் தப்பி சென்ற நிலையி ல் சிறைத் துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .

கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!
சங்கர் ஐபிஎஸ்- சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Oct 2026 16:33 PM IST

தமிழகத்தில் சென்னை புழல் மத்திய சிறை மற்றும் தேனி மாவட்ட கிளை சிறையில் இருந்து அடுத்த அடுத்த கைதிகள் தப்பி சென்றனர். இதில், புழல் சிறையில் இருந்து 4 கைதிகளும், தேனி சிறையில் இருந்து 17 கைதிகளும் தப்பி சென்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சிறைத்துறை டிஜிபி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இவருக்கு பதிலாக சிறைத்துறை ஏடிஜிபியாக சங்கர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், இபி சிஐடி ஏடிஜிபியாக இருந்த நிலையில், தற்போது சிறைத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வலிப்பு வந்தது போல நடித்து தப்பிய சிறை கைதிகள்

தேனி மாவட்ட கிளை சிறையில் சம்பவத்தன்று இரவு ஒரு கைதி வலிப்பு வந்தது போல நடித்தார். இதை நம்பிய சிறை காவலர்கள் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்த நிலையில், அந்த பிளாக்கில் இருந்த 17 கைதிகள் சிறை காவலர்களை தாக்கிவிட்டு சிறையில் இருந்து தப்பி சென்றனர். உடனடியாக இந்த சம்பவம் குறித்து தேனி மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், 17 தனி படைகள் அமைக்கப்பட்டு தப்பி சென்ற கைதிகள் தேடப்பட்டு வந்தனர்.

மேலும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!

டிரோன் கேமராக்கள் மூலமாக 17 கைதிகள் கைது

இதில், அவர்கள் அண்டை மாநிலங்களுக்கு தப்பி செல்லாத வகையில் மாநில எல்லைகளில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் காரணமாக, அவர்கள் தேனி சிறை சுற்றுவட்டார பகுதிகளில் இருக்க கூடும் என்று போலீசார் சந்தேகித்தனர். அதன் அடிப்படையில், ட்ரோன் கேமராக்கள் மூலமாக கைதிகள் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில், சிறை அருகே உள்ள காட்டு பகுதியில் இருந்து 8 கைதிகள் பிடிக்கப்பட்டனர். ஒரு கைதியின் ஆட்டோவில் தப்பி செல்ல முயன்ற போதும், மற்ற கைதிகள் பொதுமக்களுடன் சுற்றி திரிந்த போதும் கைது செய்யப்பட்டனர். அதன்படி, சிறையில் இருந்து தப்பி சென்ற 17 கைதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

9 சிறை காவலர்கள் பணியிடை நீக்கம்

இதே போல, புழல் மத்திய சிறையில் இருந்து தப்பி சென்ற கைதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அடுத்தடுத்து சிறை கைதிகள் தப்பி சென்ற சம்பவம் கடும் விமர்சனங்களை எழுப்பியிருந்தது. இதில், தேனி சிறை காவலர்கள் 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். அந்த வகையில், தற்போது சிறைத்துறை டிஜிபியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க: கொலை செய்யனுமா? Call Me.. அரசு பேருந்தில் பயணிகளை அலறவிட்ட வாசகம்!

Follow Us