AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த சோதனை நடக்கிறது – கே.என் நேரு..

KN Nehru Pressmeet: செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை திசை திருப்பவே இந்த சோதனை நடக்கிறது – கே.என் நேரு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Oct 2026 16:13 PM IST

அக்டோபர் 29, 2026: முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை!

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் கே.என். நேரு. அவர் அமைச்சராக இருந்த காலத்தில், உதவிப் பொறியாளர்கள், இளநிலைப் பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கான நியமனங்களில் சுமார் ரூ.634 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகப் புகார் எழுந்தது.

மேலும் படிக்க: தமிழக அமைச்சரவை கூட்டத்தில் 4 முக்கிய முடிவுகள்! விவாதிக்கப்பட்ட முக்கிய விஷயங்கள் – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்..

இந்தப் புகாரின் அடிப்படையில், திருச்சி தில்லை கங்கா நகரில் உள்ள கே.என். நேருவின் வீடு மற்றும் அலுவலகங்கள், சென்னையில் அவருக்குச் சொந்தமான இடங்கள், அவரது சகோதரர் ரவீந்திரனின் வீடு உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே கடந்த மாதம் சோதனை நடைபெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

“பிரச்சினைகளைத் திசைதிருப்பவே சோதனை”

சோதனை நடைபெற்று வரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த கே.என். நேரு, தமிழகத்தில் சிறைச்சாலைகளில் இருந்து கைதிகள் தப்பிச் செல்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருவதாகக் குறிப்பிட்டார். இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இந்தச் சோதனை நடத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையிலேயே தற்போது நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் தங்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், அந்த வழக்குகளை நீதிமன்றத்தில் எதிர்கொண்டு வெளியே வந்ததாகவும் கூறினார்.

மேலும் படிக்க: கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!

தற்போதைய வழக்கு தொடர்பாகவும் சட்டரீதியாகப் போராடுவோம் எனத் தெரிவித்த அவர், தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

“திமுக எப்போதும் நிலையானதாக இருக்கும்!”

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் திமுகவின் செயல்பாடு குறித்துப் பேசிய கே.என். நேரு, கடந்த தேர்தல்களில் மூன்றாவது இடத்தில் இருந்த திமுக தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் காங்கிரஸ், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் திமுகவை எதிர்த்ததாகக் குறிப்பிட்ட அவர், தற்போது விஜய் திமுகவை எதிர்த்து வருவதாகக் கூறினார். திமுகவை எதிர்ப்பவர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள்; ஆனால் திமுக எப்போதும் நிலையானதாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

 

Follow Us