AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்.. நா வரேன் போட்டிக்கு.. சீமான் மாஸ் அறிவிப்பு!

Seeman Contesting Ambasamudram By Election : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் தொகுதியில் நடைபெற உள்ள இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான் போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறியவற்றை பார்க்கலாம்.

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தல்.. நா வரேன் போட்டிக்கு.. சீமான் மாஸ் அறிவிப்பு!
சீமான்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 29 Oct 2026 16:56 PM IST

தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றி கழகத்தில் இணைத்தனர். இதனால், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், கரூர், விராலிமலை, பெருந்துறை ஆகிய தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் அண்மையில் இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் வெற்றி பெற்றனர். மீதமுள்ள 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காரைக்குடி தொகுதியில் தோல்வியை தழுவிய சீமான்

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். ஆனால், அவர் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். தற்போது, அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அவரே அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த தொகுதியில் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

மேலும் படிக்க: கவுன்சிலருக்கு மட்டுமில்ல எனக்கே இந்த நிலை தான்.. சென்னை மாநகராட்சியை கலைத்து விடலாம்.. கூட்டத்தில் கொந்தளித்த மேயர் ஆர். பிரியா!

உயர்நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கும் இடைத்தேர்தல் அறிவிப்பு

அவர், தனது எம்எல்ஏ பதவிய ராஜினாமா செய்ததுடன் அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. இந்த வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதற்கான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

அம்பாசமுத்திரத்தில் போட்டியிடுவதாக சீமான் அறிவிப்பு

இந்த அறிவிப்பை தொடர்ந்து 5 தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க உள்ளது. இதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுவதாக சீமான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் அம்பாசமுத்திரம் உட்பட 5 பகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அனைத்து வேட்பாளர்களும் உறவினர்கள் தான்

அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நான் போட்டியிட உள்ளேன். முன்னதாக தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது உறவினர் என்பதால் தன்னை எதிர்த்து போட்டியிட மாட்டார் என்று தெரிவித்திருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, உறவு வேறு, அரசியல் நிலைப்பாடு வேறு அனைத்து கட்சி வேட்பாளர்களும் உறவினர்களே என சீமான் பதில் அளித்தார்.

மேலும் படிக்க: கைதிகள் தப்பிய சம்பவம் எதிரொலி.. சிறைத்துறை டிஜிபி திடீர் பணியிட மாற்றம்!

Follow Us