AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Sadanandham: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!

Guitarist Sadanandham Passes Away: இளையராஜாவின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக கிட்டார் இசைக் கலைஞராக பணியாற்றியவர் சதானந்தம். இபவர் இன்று (29/10/2026) உடல்நல குறைவின் காரணமாக காலமானார்.இவரின் இறப்பு இசைக் கலைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Sadanandham: இளையராஜாவின் கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் காலமானார்!!
கிதார் கலைஞர் சதானந்தம் காலமானார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 29 Oct 2026 16:31 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி மற்றும் பழம்பெரும் இசையமைப்பாளராக இருப்பவர்தான் இசைஞானி இளையராஜா (Ilaiyaraaja). இவரின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய கிட்டார் கலைஞர்தான் சதானந்தம் (Guitarist Sadanandham). இவர் பிரபல இசையமைப்பாளரும், ஏவிஎம் நிறுவனத்தின் இசையமைப்பாளராக பணியாற்றிய ஏவிஎம் ஆர்.சுதர்சனத்தின் (AVM R. Sudarshan) மகன் ஆவார். இவரை சினிமாவில் சதா மாஸ்டர் (Sada Master) என்றும் அழைக்கப்பட்ட இரவுக்கு, திரையிசையில் பிரபலம் உண்டு. இவர் சென்னையில் இன்று (29/10/2026) உடல்நல குறைவின் காரணமாக தனது 79வது வயதில் காலமானார். இவரின் இறப்பு ஒட்டுமொத்த இசைக்கலைஞர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரின் இறப்பு குறித்து இசைஞானி இளையராஜாவும், வீடியோ வெளியிட்டு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் இவரின் இறப்பு பிரபலங்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பலரும் அவரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவருகிறார்கள்.

இதையும் படிங்க: பிக்பாஸில் ஜேசனிடம் அநாகரீகமாக நடந்துக்கொண்ட தன்யா… வைரலாகும் வீடியோ!

கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் கிட்டார் இசைக்கும் வீடியோ பதிவு:

யார் இந்த கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம் :

கிட்டார் இசைக்கலைஞர் சதானந்தம், இளையராஜாவின் இசைக்குழுவில் பல ஆண்டுகளாக கிட்டார் இசைத்து பிரபலமானவர். இவரின் இசையில் இதுவரை பல பாடல்கள் வெளியாகியுள்ளது. இளையராஜாவின் இசையில் இவர் அன்னக்கிளி என்ற திரைப்படத்தின் மூலம் தொடங்கி கிட்டத்தட்ட, 50 அன்டுகளுக்கும் மேலாக பல பாடல்களுக்கு கிட்டார் இசைத்திருக்கிறார். இவரின் இசை பங்களிப்பானது பல புகழ்பெற்றப் பாடல்களை கொடுத்திருக்கிறது. இவரின் கிட்டார் இசையில் செந்தூரப்பூவே என்ற பாடல் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திருந்தது.

இதையும் படிங்க: ராகவா லாரன்ஸ் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட பென்ஸ் படக்குழு!

தனது கிட்டார் இசை மூலம் பல ஹிட் பாடல்களை இவர் கொடுத்திருந்த நிலையில், இளையராஜாவை அடுத்து மற்ற இசையமைப்பாளார்களுடனும் பணியாற்றியுள்ளார். அந்த விதத்தில் இவர் தனது வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாட்டின் காரணமாக இன்று (29/10/2026) காலமானார். இவரின் இறப்பு திரையுலகினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் மறைவுக்கு இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். மேலும் பல சினிமா பிரபலங்களும் தங்களின் இரங்கல்களை தெரிவித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us