Ilaiyaraaja: காயப்படுத்தும் எண்ணம் சிறிதும் இல்லை.. இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட கருப்பு படக்குழு!
Karuppu Crew Issues Apology to Ilaiyaraaj: தமிழ் சினிமாவில் பிரபல இளையமைப்பாளராக கிட்டத்தட்ட 50 ஆண்டுக்கும் மேலாக இருப்பவர் இளையராஜா. இவரைப்பற்றி சூர்யாவின் கருப்பு படத்தில் சில வசனங்கள் இடம்பெற்றிருந்தது. அந்த வசனங்கள் அவரை காயப்படுத்தவேண்டும் என்பதற்காக பயன்படுத்தவில்லை என கருப்பு படக்குழு விளக்க பதிவை வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகியிருந்த படம்தான் கருப்பு (Karuppu). இப்படத்தில் சூர்யா ஆக்ஷன் நாயகன் மற்றும் கருப்பசாமி வேடத்தில் நடித்திருந்த நிலையில், திரையரங்குகளை தெறிக்கவிட்டிருந்தது. இந்த திரைப்படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் எஸ்.ஆர். பிரபு (SR Prabhu) தயாரித்திருந்தார். இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு மே 15ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சூர்யாவுடன் நடிகை திரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan) இணைந்து நடித்திருந்தார். இந்த படமானது ஒரு நாள் தாமதமாக வெளியாகியிருந்தாலும், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்ப்பார்ப்புகள் இருந்தது. இந்நிலையில் திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.
அந்த வகையில் இப்படத்தில் இளையராஜாவின் (Ilaiyaraaja) பாடல் ஒன்று இடம்பெற்றிருந்த நிலையில், அவரை கலாய்க்கும் விதமாக சில காட்சிகள் மற்றும் வசனங்கள் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அந்த வசனங்கள் மற்றும் காட்சிகள் இளையராஜாவை காயப்படுத்தும் விதமாக அமைக்கப்படவில்லை என படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: தொடர்ந்து அடுத்தடுத்த சர்ப்ரைஸை ரசிகர்களுக்கு கொடுத்த கருப்பு படக்குழு.. தி ஒன் சூர்யாவின் கருப்பு பட இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
இளையராஜா குறித்து இடம்பெற்றிருந்த வசனங்கள் குறித்து கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Pressrelease #PublicAnnouncement #Karuppu #MaestroIlayaraaja pic.twitter.com/hdgP3wZhBL
— DreamWarriorPictures (@DreamWarriorpic) May 19, 2026
அந்த பதிவில் படக்குழு, “கருப்பு படத்தில் இளையராஜா குறித்து இடம்பெற்றிருந்த காட்சிகள் வேண்டுமென்றே அமைக்கவில்லை. தற்செயலாக அமைந்த காட்சியாகும். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் இசை அரசனை காயப்படுத்தும் என்னமோ, களங்கப்படுத்தும் என்னமோ படகுலுக்கிவிற்கு சிறிதளவும் எண்ணம் இல்லை.
இதையும் படிங்க: பயத்தில் அந்த படத்திற்கு முதலில் நோ சொல்லிட்டேன்.. ஆனால் மேஜிக் மாதிரி அது நடந்தது – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
உள்நோக்கம் இன்றி வைக்கப்பட்ட இந்த காட்சிகள், தங்களையோ, தங்களை சார்தவர்களையோ மற்றும் இசைஞானி ரசிகர்களையோ அல்லது பிறரை மனம் புண்பட்டிருந்தால் எண்களின் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்” என படக்குழு அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இளையராஜா குறித்து கருப்பு படத்தில் இடம்பெற்ற வசனம்:
கருப்பு படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, தனது வழக்கறிஞர்கள் கூட்டத்துடன் போலீஸ் அலுவலகத்திற்கு முன் போராட்டம் காட்சி ஒன்றில், இளையராஜா இசையமைத்திருந்த மற்றும் விஜயகாந்த் நடித்திருந்த அலை ஓசை பட “போராடடா” பாடல் இடம்பெற்றிருந்தது. அந்த பாடலுக்கு பிறகு இளையராஜாவை நகைச்சுவை செய்யும் விதத்தில் ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. அதற்காகத்தான் படக்குழு மன்னிப்பு கேட்டு பதிவை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.