Keerthy Suresh: பயத்தில் அந்த படத்திற்கு முதலில் நோ சொல்லிட்டேன்.. ஆனால் மேஜிக் மாதிரி அது நடந்தது – கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்!
Keerthy Suresh About Mahanati Movie: சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக கருதப்படுபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். அந்த வகையில், நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கீர்த்தி சுரேஷ், முன்னதாக படம் ஒன்றில் நடிப்பதற்கு நோ சொல்லிவிட்டு, பின் நடித்து ஹிட் கொடுத்த படம் பற்றி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழியில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவருபவர் கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல பாடங்கள் வெளியாகியுள்ளது. இவரும் தமிழில் முதல்வரும், முன்னாள் நடிகருமான விஜய் (Vijay) முதல் சூர்யா (Suriya) உள்ளிட்ட பல்வேறு நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளிலும் படத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக உள்ளார். இவருக்கு இந்தியில் முதல் படமாக அமைந்தது பேபி ஜான் (Baby John), தெறி படத்தின் இந்தி ரீமேக்காக உருவான இப்படத்தில், நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதை இயக்குநர் அட்லீ (Atlee) தயாரித்திருந்த நிலையில், இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது.
அந்த வகையில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த கீர்த்தி சுரேஷ், ஆரம்பத்தில் சாவித்ரியின் பயோபிக்கான மகாநதி (Mahanati) என்ற படத்தில் நடிக்க, நோ சொன்னது பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி அவர் கூறியது பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: டார்க் காமெடி பாணியில் ஓடிடியில் வெளியான இந்த மோகினியாட்டம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
மகாநதி படத்தில் நடிக்க ஆரம்பத்தில் நோ சொன்னது பற்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்:
அந்த நேர்காணலில் பேசிய கீர்த்தி சுரேஷ், “ஆரம்பத்தில் பயத்தில் மகாநதி படத்தில் நடிப்பதற்கு நோ சொல்லிட்டேன். தயாரிப்பாளர்கள் எல்லாருமே பயங்கர ஷாக், என்னது இப்படியொரு படத்தில் நடிக்க நோ சொல்லிட்டாங்களானு. இப்போது அந்த படத்தில் நடித்ததை நினைத்தால், ஒரு மேஜிக் மாதிரி இருக்கிறது. அந்த மேஜிக்கை மீண்டும் செய்ய முடியாதது. அதற்கு பிறகு நிறைய பயோபிக் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தது.
இதையும் படிங்க: தமிழில் ஒரே படத்தின் மூலம் ஓஹோன்னு வரவேற்பு.. இந்த சிறுமி எந்த நடிகைனு தெரியுமா?
ஆனால் நான் அதற்கெல்லாம் நோ சொல்லிட்டேன். எல்லா நேரங்களிலும் பயோ பிக் வெற்றியாகும் என்பது சாத்தியமில்லை. எனக்கு நல்லபடியாக மகாநதி படம் அமைந்தது. அது எனது வாழ்க்கை அல்லது ஒரு 5 வருடத்திற்காகவாவது போதுமான படமாக இருந்தது” என அதில் அவர் வெளிப்படையாக பேசியிருந்தார்.
கீர்த்தி சுரேஷின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தற்போது தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் படங்கள் தயாராகிவருகிறது. தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ரௌடி ஜனார்தனா என்ற படத்தில் நடித்துவருகிறது. திருமணத்திற்கு பிறகு, பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.