Director Bala: மமிதாவை நான் அடிச்சேனா.. அவர் எனது மகள் மாதிரி.. உண்மையை சொன்ன இயக்குநர் பாலா!
Director Bala About Mamitha Baiju: தமிழ் சினிமாவில் பிரபலம் மற்றும் அதிகம் குற்றம்சாற்றப்படும் இயக்குநராகவும் இருப்பவர் பாலா. இவர் முன்னதாக நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் வணங்கான் படத்தில் சூர்யா நடித்தபோது, மமிதா பைஜூவை அடுத்ததாக சொல்லப்பட்ட விஷயம் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்.
இயக்குநர் பாலா (Director Bala) தமிழ் சினிமாவில், தனது வித்தியாசமான கதைக்களம் மற்றும் சினிமாவில் மாற்றுப்பாதையான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரின் இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகியுள்ளது. அதிலும் சில படங்கள் இந்தி சினிமா வரையிலும் பிரபலமாகி, பின் இந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இவரின் இயக்கத்தில் சூர்யா (Suriya) முதல் ஆர்யா (Arya) மற்றும் சியான் விக்ரம் (Chiyaan Vikram) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணையானது நடித்துள்ளனர். அதிலும் சூர்யா பாலாவிற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட. அந்த வகையில் இவர் பாலாவின் இயக்கத்தில் வணங்கான் (Vanangaan) என்ற படத்தில் நடிக்கவிருந்தார். சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றிருந்த நிலையில், பின் இயக்குநர் பாலாவே சூர்யாவை இப்படத்தில் நடிக்கவேண்டாம் என்றார் கூறியதாக சொல்லப்பட்டது.
அந்த வகையில் இதில் கதாநாயகியாக மமிதா பைஜூ (Mamitha Baiju) நடிக்கவிருந்த நிலையில், சில நாட்கள் ஷூட்டிங்கில் காலனித்துக்கொண்டார். அப்போது அந்த ஷூட்டிங்கில், இயக்குநர் பாலா நடிகை மமிதாவை அடித்ததாவும், அதனால் அவர் படத்திலிருந்து விலகியதாகவும் கூறப்பட்டது. அது குறித்து பாலா சொன்ன விளக்கம் பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: அந்த நடிகைதான் எனக்கு ரோல் மாடல்.. மனம் திறந்து பேசிய ஸ்ரீலீலா!
மமிதாவை உண்மையிலே அடித்தாரா பாலா:
அந்த நேர்காணலில் பேசுகையில், இயக்குநர் பாலா., “ஐயோ அந்த பொண்ணு எனக்கு மகள் மாதிரி, அவரை போய் நான் அடிப்பேனா?, அது சின்ன பிள்ளை அதை யாராச்சும் அடிப்பாங்களா?. வணங்கான் பட ஷூட்டிங்கின்போது, மும்பையில் இருந்துவந்த மேக்கப் ஆர்டிஸ் ஒருவர், சும்மா இருக்காமல் மமிதாவிற்கு மேக்கப் போட்டு விட்டுவிட்டார்.
இதையும் படிங்க: விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது – நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!
எனக்கு மேக்கப் போட்டால் பிடிக்காது என்று, அவருக்கும் தெரியவில்லை. ஷாட் ரெடியாகிவிட்டது, மமிதா மேக்கப்புடன் வந்ததும் எனக்கு கோவம் வந்துருச்சி. யாரு மேக்கப் போட்ட என, அடிப்பதற்கு சும்மா கையைதான் ஓங்கினேன். அதுக்குள்ளே நான் அவரை அடித்துவிட்டேன் என நியூஸ் பரவிவிட்டது” என்று அதில் அவர் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
நடிகை மமிதா பைஜூவின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
நடிகை மமிதா பைஜூ தற்போது தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் லீட் நாயகியாக நடித்துவருகிறார். இவர் தளபதி விஜய் முதல் சூர்யா உள்ளிட்ட உச்ச நடிகர்களுடனும் படங்களில் இணைந்து நடித்துவிட்டார். அந்த வகையில் மலையாளம் மற்றும் தமிழில் தொடர்ந்து புது படங்களில் நடித்தவருகிறார். அந்த வகையில் இறுதியா தனுஷின் கர படத்தில் நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.