Thalapathy Vijay: அது எனக்கு மகிழ்ச்சியான தொல்லையாக இருந்தது.. ரசிகர்கள் குறித்து தளபதி விஜய் சொன்ன விஷயம்!
Thalapathy Vijay About Fans And Life Before Cinema: தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவந்தவர் தளபதி விஜய். இவர் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் ரசிகர்களால் தனக்கு எப்போதும் அன்பு தொல்லைகள் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் சினிமாவில் நுழைவதற்கு முன் இருந்த வாழ்கை குறித்து பகிர்ந்திருந்தார்.
கோலிவுட் சினிமாவில் மக்களின் நாயகனாகவும், ரசிகர்கள் கொண்டாடும் நடிகராகவும் இருந்துவந்தவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி முழுவதுமாக அரசியல் இறங்கிவிட்டார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 69 திரைப்படங்கள் உள்ளது. அதிலும், இன்னும் வெளியாகாமல் ஜன நாயகன் (Jana Nayagan) என்ற படமானது காத்திருக்கிறது. இப்படத்தின் சென்சார் பிரச்சனைகள் இன்னும் நிறைவடையாத காரணத்தினால், இன்னும் வெளியிடப்படவில்லை. அதனால், விரைவில் இப்படமும் வெளியாகும் என கூறப்படுகிறது. விஜய் தற்போது முழுவதுமாக அரசியலில் இறங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் முதன்மை கட்சியாகவும் இருந்துவருகிறது.
அந்த வகையில் இவர் முழுவதுமாக சினிமாவிலிருந்து விலகியதாக கூறப்படும் நிலையில், இவர் எந்த படங்களிலும் இனி நடிக்கமாட்டேன் என்று அவரே தெரிவித்திருந்தார். இந்நிலையில் முன்னதாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த விஜய், தனது ரசிகர்கள் கொடுக்கும் அன்பு தொல்லை மற்றும் சினிமாவில் நுழைவதற்கு முந்தைய வாழ்க்கை பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். அது பற்றி பார்க்கலாம்.




இதையும் படிங்க: அனுபமா பரமேஸ்வரனுக்கு மட்டும் ஏன் இப்படியான கதையா அமையுது? ஓடிடியில் வெளியாகி உள்ள லாக்டவுன் படத்தின் விமர்சனம் இதோ
தனது ரசிகர்கள் மற்றும் சினிமாவிற்கு முந்தைய வாழ்க்கை பற்றி விஜய் பகிர்ந்த விஷயம்:
அந்த நேர்காணலில் ரசிகை ஒருவர் விஜய்யிடம், “நீங்கள் நடிகராகிய பிறகு, பணம், புகழ், ஹீரோ என்ற பதவி மற்றும் ரசிகர்கள். இதை நீங்கள் எதையும் தொல்லையாக நினைக்கிறீர்களா?” என கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்து விஜய் பேசுகையில், “நான் கூறுகிறேன், அதை நான் தொல்லை என்றுசொல்லமாட்டேன். முன்பெல்லாம் சினிமாவிற்கு வருவதற்கு முன், நண்பர்களுடன் எந்தவித பிரச்சனைகளும் இல்லாமல் படத்திற்கு போவேன். டீக்கடையில் உட்க்கார்ந்து டீ குடிப்பேன் . முதல் நாள் முதல் கடைசியாக ரஜினி சாரின் படத்தை, கூட்டத்துடன் பார்ப்பேன்.
இதையும் படிங்க: விஜய், சூர்யா, தனுஷ் உடன் நடித்தது இப்படிதான் இருந்தது – நடிகை மமிதா பைஜூ நெகிழ்ச்சிப் பேச்சு!
இந்த விஷயங்களை எல்லாம் நான் மிஸ் பண்ணிறேன். எனக்கும் மக்களுடன் இருக்கவேண்டும், அவர்களுடனே செல்லவேண்டும் என்பது எனக்கு பிடித்த விஷயம். நடிகரான பிறகு இதையெல்லாம் மிஸ் பண்ணுறேன்னு சொல்லலாம். ஆனால் இதை தொல்லை என்ற கணக்கில் எடுக்கமுடியாது, நீங்கள் கேட்டதற்காகவாவது எதாவது சொல்லவேண்டும் என்றால், இதுவொரு மகிழ்ச்சியான தொல்லை” என்று அதில் அவர் விளக்கமாக தனது ரசிகர்களின் அன்பு குறித்து பேசியிருந்தார்.
ஜன நாயகன் படம் குறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Tamil – https://t.co/fEr2mhmEzV
Telugu – https://t.co/BPvd54HKSg
Hindi – https://t.co/okSGqw2Pw9 pic.twitter.com/fCIEQSxwGR
— Vijay (@actorvijay) January 3, 2026