ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்டில் சிஎம் என போட இதுதான் காரணம் – இயக்குநர் எச். வினோத்
H Vinoth talks about the CM Title Card | தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படத்தி. சிஎம் என டைட்டில் கார்ட் போட என்ன காரணம் என்று பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர் தளபதி விஜயின் நடிப்பில் இறுதியாக உருவாகி திரையரங்குகளில் வெளியான படம் ஜன நாயகன். இந்தப் படம் தளபதி விஜய் தமிழ் நாட்டின் முதலமைச்சராக ஆவதற்கு முன்பு இந்த ஜன நாயகன் படத்தில் நடித்து முடித்தார். மேலும் இந்தப் படம் தான் தனது நடிப்பில் வெளியாகும் கடைசிப் படம் என்று தளபதி விஜய் முன்னதாக தெரிவித்ததன் காரணமாக இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமா இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்திற்கு தொடர்ந்து 6 மாதங்களாக சென்சார் சான்றிதழ் பெற படக்குழு போராடி வந்ததும் இறுதியில் படத்திற்கு ஏ சான்றிதழ் தான் வழங்க முடியும் என்று சென்சார் கொடுத்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து பல தடைகளைத் தாண்டி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியானதை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடித் தீர்த்தனர். இப்படி இருக்கும் நிலையில் படம் குறித்தும் படப்பிடிப்பில் நடந்த சம்பவங்கள் குறித்தும் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் என பலரும் தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குநர் எச். வினோத் அளித்தப் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




ஜன நாயகன் படத்தின் டைட்டில் கார்டில் சிஎம் என போட இதுதான் காரணம்:
அதன்படி இயக்குநர் எச் வினோத் பேசியதாவது, இது ரசிகர்களின் யோசனை. தேர்தலுக்கு முன்பே ரசிகர்கள் ஒரு கருத்தைச் சொல்லியிருந்தனர். அதாவது, தேர்தல் முடிவதற்குள் படம் வெளியானால், அதில் தளபதி விஜய் என்று பெயர் இடம்பெற வேண்டும். ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு படம் வெளியானால், தமிழ்நாடு முதலமைச்சர் என்று இடம்பெற வேண்டும் என்பதே அது என்று இயக்குநர் எச். வினோத் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… Magudam: விஷாலின் மகுடம் படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்.. சென்சார் அப்டேட் இதோ!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Dir #HVinoth about CM Title Card 💥
– It was the fans idea. Even before the election, fans said that if the film was released before the election, the title card should be #ThalapathyVijay.
– If the film was released after the election, it should be Chief Minister Tamil Nadu.…— Movie Tamil (@_MovieTamil) August 7, 2026
Also Read… விவாகரத்து செய்கிறாரா கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி? அப்படி என்ன செய்தார் தெரியுமா?