AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Ajith Kumar: அந்த நடிகரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் – அஜித் குமார் ஓபன் டாக்!

Ajith Favorite Actors: தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடும் நடிகராகவும், கார் ரேஸராகவும் இருந்துவருபவர் அஜித் குமார். இவர் முன்பு ஒரு நேர்காணலில், தனக்கு பிடித்த நடிகர்கள் யார் யார் என்பது குறித்து அவர் பேசியுள்ள. அப்படி அஜித் குமாருக்கு பிடித்த நடிகர்கள் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Ajith Kumar: அந்த நடிகரின் நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும் – அஜித் குமார் ஓபன் டாக்!
அஜித் குமார்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 07 Aug 2026 08:22 AM IST

இந்திய சினிமாவில் ஒரு நடிகராகவும், கார் ரேஸராகவும் (Car Racer) மிகவும் புகழப்பட்டுவருபவர் அஜித் குமார் (Ajith Kumar). இவரின் நடிப்பில் இதுவரை மொத்தமாக 63 திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவருக்கு முதல் அமராவதி (Amaravathy). இந்த படத்தின் மூலம் சினிமாவில் நாயகனாக இவர் அறிமுகமான நிலையில், ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதற்கு பின் தொடர்ந்து புது புது படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தான் நடிகரான காரணமே ரேஸராக மாறுவதற்கு பணம் தேவை என்ற காரணம்தான் என பல நேர்காணல்களில் அவர் தெரிவித்திருக்கிறார். அப்படி இருந்தும், தனது ரசிகர்களுக்காக தற்போது தொடர்ந்து சினிமாவில் பணியாற்றிவருகிறார். இறுதியாக இவரின் நடிப்பில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியிருந்த நிலையில், அஜித்தின் சினிமா வாழ்க்கையிலே அதிகம் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த அஜித் குமார், தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர்கள் யார் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: உதயநிதி பேசுனது தப்பு-னால தான் போலீஸ் அரெஸ்ட் பண்ணாங்க – விஷால்!

கோலிவுட் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர்கள் குறித்து பேசிய அஜித் குமார்:

அந்த நேர்காணலில் தொகுப்பாளர், “உங்களுக்கு சினிமாவில் பிடித்த நடிகர் யார்?” என கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அஜித் குமார், “சினிமாவில் எனக்கு நடிகர் திலகம் சிவாஜி பிடிக்கும் அல்லது எம்ஜிஆர் பிடிக்கும் என்று அளவுக்கு சொல்லும் பெரிய ஆள் நான் இல்லை. எனக்கு அவர்களை ஒரு முன்னோடியாக பிடிக்கும்.

இதையும் படிங்க: டிசி முதல் ஜிடிஎன் வரை… நாளை பான் இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ

சினிமாவில் நடிப்பு என்ற எனக்கு கமல்ஹாசன் சார் பிடிக்கும், ஸ்டைல் என்ற ரஜினிகாந்த் சார் பிடிக்கும். அப்படியே நடனம் என்றால் எனக்கு பிரபுதேவா மிகவும் பிடிக்கும்” என அந்த பழைய நேர்காணலில் அஜித் வெளிப்படையாக பேசியிருந்தார். தற்போது இது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

அஜித் நடித்துவரும் புதிய திரைப்படம் குறித்து வைரலாகும் எக்ஸ் பதிவு:

அஜித் குமார், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டெர் டெவில் என்ற படத்தில் இணைந்துள்ளார். இப்படம் அஜித் குமாரின் 64வது திரைப்படம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் டைட்டில் அறிவிக்கப்பட்டது. இதை நடிகை ஷாலினி அஜித் குமார் தயாரிக்கவுள்ள நிலையில், அனிருத் இசையமைக்கிறார். கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு பின் ஷாலினி மீண்டும் தயரிப்பாளராக சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us