ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான் – தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி
Producer Archana Kalpathi Recent Interview | தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகின்றது ஏஜிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் அதிக வசூல் செய்த படம் எது என்பது குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமாக வலம் வருகின்றது ஏஜிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. அப்படி இந்த நிறுவனம் தயாரித்து வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இந்த நிறுவனம் சின்ன சின்ன படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் என அனைத்து விதமான படங்களையும் தயாரித்து வருகின்றது. தொடர்ந்து பல முன்னணி நாயகன்களின் படங்களையும் இந்த நிறுவனம் தயாரித்து வருகின்றது. படங்களை தயாரிப்பது மட்டும் இன்றி படங்களை வெளியிடும் பணிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகின்றது. இந்த நிலையில் இறுதியாக இந்த நிறுவனம் தயாரித்த ப்ளாஸ்ட் படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலப் படங்களை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.




ஏஜிஎஸ் நிறுவனத்தில் அதிக லாபம் ஈட்டியது தளபதி விஜயின் படம் தான்:
அந்தப் பேட்டியில் பேசியதாவது, ஏஜிஎஸ் நிறுவனத்தின் வரலாற்றிலேயே அதிக லாபம் ஈட்டிய படம் பிகில் தான். ஆனால், வெளியூர்களில் அது எதிர்பார்த்த அளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பிகில் எனக்குப் பல பாடங்களைக் கற்றுக்கொடுத்தது. லவ் டுடே படத்திலிருந்தே நான் தளபதி விஜயின் தீவிர ரசிகன். என்னை இப்படத் தயாரிப்புப் பணியில் ஈடுபடுத்துமாறு என் தந்தையிடம் பரிந்துரைத்ததே அவர்தான்.
நாம் பெரிதும் விரும்பும் நாயகர்களை நிஜ வாழ்க்கையில் நேரில் சந்திக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், என் எதிர்பார்ப்புகளை முழுமையாகப் பூர்த்தி செய்த மிகச் சிலரில் அவரும் ஒருவர். அவரது பணி மீதான அர்ப்பணிப்பு, ஒழுக்கம், எளிமை என அனைத்தும் சிறப்பானவை; அவர் மிகவும் எளிமையான மனிதர்.
அட்லியின் தொலைநோக்குப் பார்வை மிகவும் பெரியது. சந்தை மதிப்பை மட்டுமே கருத்தில் கொண்டு படம் எடுப்பதில் அவருக்கு நம்பிக்கை இல்லை; அவரே ஒரு புதிய சந்தையை உருவாக்குகிறார். இப்படம் கேரளா மற்றும் கர்நாடகாவில் நன்றாக ஓடியதுடன், வெளிநாடுகளிலும் மிகப்பெரிய வசூலைக் குவித்தது. அதனால் அட்லி மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. ஜவான் படத்தைப் பாருங்கள், அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
Also Read… தியேட்டரில் சூப்பர் ஹிட் அடித்த இதயம் முரளி ஓடிடி ரிலீஸ் எப்போது? அப்டேட் இதோ
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Producer #ArchanaKalpathi in a Recent Interview ⭐:
• #Bigil is the Most Profitable film in the history of AGS.. But it didn’t register well outside.. Bigil taught me Everything.. I’m a Huge Fan of him Since Love Today.. He’s the one who suggested to my father to bring me in… pic.twitter.com/yaYZ9vXbQI
— Laxmi Kanth (@iammoviebuff007) August 6, 2026