கம்பன் சொல்ல வந்து ஆனால் கூச்சங்கொண்டு எழுதா ஓர் உவமை நீ… 4 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட் அடித்த சீதா ராமம்
4 Years Of Sita Ramam Movie | தெலுங்கு சினிமாவில் வெளியாகி பான் இந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சீதா ராமம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் பீரியட் ரொமாண்டிக் ட்ராமா பாணியில் உருவாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் சீதா ராமம். இந்தப் படம் கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 05-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் சீதா ராமம். இந்தப் படத்தை இயக்குநர் ஹனு ராகவபுடி எழுதி இயக்கி இருந்தார். மேலும் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்த இந்தப் படத்தில் நடிகை மிருணாள் தாக்கூர் நாயகியாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் ராஷ்மிகா மந்தனா, சச்சின் கெடேகர், சுமந்த், தருண் பாஸ்கர், கௌதம் வாசுதேவ் மேனன், சத்ரு, பிரகாஷ் ராஜ், பூமிகா சாவ்லா, வெண்ணிலா கிஷோர், ருக்மணி விஜயகுமார், அபிநயா, ஜிசு சென்குப்தா, முரளி சர்மா, தின்னு ஆனந்த், அஸ்வத் பட், சுனில், ரோகிணி, பிரியதர்ஷி புலிகொண்டா மற்றும் ராகுல் ரவீந்திரன் என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார்.
இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைத்த நிலையில் படத்தைப் போல பாடல்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற. இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவைடந்த நிலையில் படத்தினை ரசிகரகள் கொண்டாடி வருகின்றனர்.
4 ஆண்டுகளைக் கடந்தது சூப்பர் ஹிட் அடித்த சீதா ராமம்:
இந்து முஸ்லிம் மதத்தில் பிறந்தவர்கள் காதலிப்பது போல பலப் படங்கள் இந்திய சினிமாவில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்தப் படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட படமாக உள்ளது இந்த சீதா ராமம். ஒரு இஸ்லாமிய இளவரசி இந்தி மதத்தை சேர்ந்த ராணுவ வீரரும் காதலிக்கிறார்கள். இவர்கள் இருவரின் காதல் எப்படி இணைந்ததா இல்லையா என்பதே படத்தின் கதை.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
4 years of #SitaRamam ❤️✨
A timeless love story that continues to live in our hearts.
From its beautiful storytelling and soulful music to unforgettable performances, the film remains a cherished cinematic experience.#4YearsofSitaRamam@dulQuer @mrunal0801 @iamRashmika… pic.twitter.com/NtSnkxJ0V4
— UV Communications (@UVCommunication) August 5, 2026
Also Read… அரசன் படத்தில் சிம்புவின் அம்மாவா நான்? – விளக்கம் கொடுத்த ஆண்ட்ரியா ஜெர்மையா



