AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும்? நடிகர் சூர்யா விளக்கம்

Suriya talks about Rolex movie | நடிகர் சூர்யா நாயகனாக பல படங்களில் நடித்து உள்ள நிலையில் அவர் வில்லனாக நடித்து மிரட்டிய படம் விக்ரம். இந்தப் படத்தில் அவரது ரோலக்ஸ் கதாப்பாத்திரம் மட்டும் தணியாக படமாக்கப்படும் என்று இயக்குநர் தெரிவித்து இருந்த நிலையில் அது குறித்து சூர்யா பேசியுள்ளார்.

ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும்? நடிகர் சூர்யா விளக்கம்
ரோலக்ஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Aug 2026 15:58 PM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக பல ஹிட் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சூர்யா. நாயகனாக நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் அவர் வில்லனாக நடித்தப் படங்கள் இரண்டு. அதில் ஒன்று அவரே நாயகனாகவும் வில்லனாகவும் நடித்த 24 படம். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா மூன்று வேடத்தில் நடித்து இருந்தார். அதில் ஒரு வேடம் வில்லனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் நடிகர் கமல் ஹாசன் நாயகனாக நடித்த விக்ரம் என்ற படத்தில் ரோலக்ஸ் என்ற வில்லன் வேடத்தில் நடிகர் சூர்யா நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் க்ளைமேக்ஸில் சில நிமிடங்களே வரும்.

சில நிமிடங்கள் என்றாலும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து விக்ரம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் கதாப்பாத்திரம் ஒரு தனி படமாக எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். மேலும் அந்தப் படம் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸின் கீழ் வரும் என்றும் தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றப் படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரோலக்ஸ் படம் குறித்து நடிகர் சூர்யா பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும்?

இந்த நிலையில் நடிகர் சூர்யா சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போது அவரிடம் ரோலக்ஸ் படம் எப்போது தொடங்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டத்து. அதற்கு பதிலளித்து பேசிய நடிகர் சூர்யா, லோகேஷ் கனகராஜ் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏற்கனவே அல்லு அர்ஜுன் பட வேலையில் மும்முரமாக இருக்கிறார். அதோடு விக்ரம் 2 படமும் அவரது திட்டத்தில் உள்ளது. ரோலக்ஸ் கதாபாத்திரம் இருப்பதாகவும், அதற்கான திரைக்கதையை எழுதி வருவதாகவும் அவர் பேட்டிகளில் சொல்வதைப் பார்க்கிறேன். ஆனால், அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என சூர்யா தெரிவித்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Ajith Kumar: ஒருவழியா வந்தாச்சு… அஜித் குமாரின் AK64 பட அப்டேட் வெளியானது!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Demonte Colony 3: ரத்தத்த தா.. டிமாண்டி காலனி 3 பட ஃபர்ட்ஸ் சிங்கிள் வெளியானது!

Follow Us