AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கட்டா குஸ்தி 2 படத்தில் குஸ்தி மட்டும் இல்லை… மத்தபடி ஓகே – ஓடிடி விமர்சனம் இதோ

Gatta Kusthi 2 Movie OTT Review Here | நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்து உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது.

கட்டா குஸ்தி 2 படத்தில் குஸ்தி மட்டும் இல்லை… மத்தபடி ஓகே – ஓடிடி விமர்சனம் இதோ
கட்டா குஸ்தி 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 21:12 PM IST

தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் பலப் படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது. அப்படி ஸ்போர்ஸ் ட்ராமா காமெடி பாணியில் உருவானதாக கட்டா குஸ்தி 2 படம் தமிழ் சினிமாவில் கடந்த 3-ம் தேதி ஜூலை மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் செல்ல அய்யாவு எழுதி இயக்கி இருந்தார். முன்னதாக கட்டா குஸ்தி படத்தின் முதல் பாகத்தை இயக்கியதும் இவர்தான் என்பது குறிப்பிடத்தகது. இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை ஐஷ்வர்யா லட்சுமி நாயகியாக நடித்து இருந்தார். இவர்கள் இருவரின் காம்போ முதல் பாகத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் இணைந்து நடித்து உள்ளனர்.

இவர்களுடன் இணைந்து முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் புதிதாக இந்த இரண்டாவது பாகத்தில் பலர் இணைந்து நடித்து இருந்தனர். படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்தப் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

கட்டா குஸ்தி 2 படத்தின் கதை என்ன?

கட்டா குஸ்தி 2 படம் தொடக்கும் போதே முதல் பாகத்தில் நாயகி ஐஸ்வர்யா லட்சுமி கர்ப்பமாக இருப்பதில் முடிக்கப்பட்ட நிலையில் அவருக்கு குழந்தை பிறப்பதில் இருந்து தொடங்கும். அப்போது நாயகன் விஷ்ணு விஷால் தனது மனைவியின் நேஸ்னல் மெடல் என்ற கனவிற்காக ஹவுஸ் ஹஸ்பெண்டாக மாறுகிறார். ஆரம்பத்தில் மனைவியின் கட்டா குஸ்தி விளையாட்டிற்கு சப்போர்ட் பண்ணும் நபராக காட்டப்படுகின்றது.

Also Read… நோ நடிப்பு… டைரக்‌ஷன் தான் – யாத்ரா தனுஷ் குறித்து வைரலாகும் தகவல்!

அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க கமெர்ஷியல் பாணியில் படம் நகர்கிறது. எதிர்பாராத நேரத்தில் எதிரிகளின் சூழ்ச்சியால் கணவன் மனைவி இடையே சண்டை வந்து பிரிகிறார்கள். அதனைத் தொடர்ந்து முழுக்க முழுக்க குடும்ப கதை மட்டுமே செல்கிறது. குஸ்தி என்ற விசயம் படத்தில் இருந்து மறைகிறது. இறுதியில் அந்த பிரச்சனைக்காக குஸ்தி மீண்டும் கொண்டுவரப்படுகின்றது.

இந்தப் படம் கமெர்ஷியல் பாணியில் உருவாகிறது என்றால் அப்படியே இதனை உருவாக்கி இருக்கலாம். ஆனால் ஸ்போர்ட்ஸ் என்று கூறிவிட்டு இதில் குஸ்தி காட்டவே இல்லை என்பது ரசிகர்களுக்கு ஒரு சிறிய ஏமாற்றமாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

Also Read… இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சர்தார் 2 பட டீசர்

Follow Us