AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சர்தார் 2 பட டீசர்

Sardar 2 movie teaser views viral on social media | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் சர்தார் 2. இந்தப் படத்தின் டீசர் வீடியோ அதிக பார்வைகளைப் பெற்று வருகின்றது.

இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சர்தார் 2 பட டீசர்
சர்தார் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Aug 2026 11:56 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் கார்த்தி பல இயக்குநர்களின் லக்கி ஜாம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் கார்த்தி பல அறிமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து அவர்களை சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்ல உதவி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி கோலிவுட் சினிமாவில் பல இயக்குநர்கள் தங்கள் சினிமா வாழ்க்கைக்கு நடிகர் கார்த்தி கொடுத்த வாய்ப்பு மிகவும் உதவியாக இருந்தது என்று பேட்டியில் தெரிவித்து இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும் சூழலில் நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு சினிமாவில் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகின்றது. மேலும் இவரது நடிப்பில் இந்த 2026-ம் ஆண்டில் இரண்டாவதாக வெளியாக உள்ள படம் சர்தார் 2. முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாவது பாகத்திற்காக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இணையத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்தது சர்தார் 2 பட டீசர்:

இந்த சர்தார் 2 படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்திரன் எழுதி இயக்கி இருந்த நிலையில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், யோகி பாபு, ரஜிஷா விஜயன் என பலரும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். மேலும் இந்தப் படம் வருகின்ற 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டது. இந்த நிலையில் படத்தின் டீசர் தற்போது அதிக பார்வைகளைப் பெற்று யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read… Jason Sanjay: உண்மையிலே ஒரு வரலாற்று தருணம்.. பொறுப்புகளும் அதிகமாக இருக்கு – முதல்வர் விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்!

சர்தார் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏ சான்றிதழால் வசூலில் வசூலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது – ஜன நாயகன் தயாரிப்பாளர்

Follow Us