AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Simran: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!

Simran About Dharman Movie: தமிழ் சினிமாவில் கதாநாயகியாக படங்களில் தொடர்ந்து நடித்துவருபவர் சிம்ரன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தர்மன் படத்திலும் நாயகியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தில் நடித்துவருவது குறித்து அவர் பகிர்ந்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Simran: அது ஒரு முன்னோட்டம் மட்டுமே.. ரஜினியுடன் தர்மன் படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிம்ரன் மற்றும் ராஷிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 30 Jul 2026 17:52 PM IST

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath marimuthu) இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) நடித்துவரும் அதிரடி திரைப்படம்தான் தர்மன் (Dharman). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகளுடன் தொடங்கியிருந்தது. இந்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் நிலையில், கமல்ஹாசன் (Kamal Haasan) தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரித்துவருகிறார். இப்படத்தை முதலில் சுந்தர் சி இயங்குவதாகவும், பின் சிபி சக்கரவர்த்தி (Cibi Chakkaravarthy) இயங்குவதாகவும் அறிவிக்கப்பட்டு பின் அவர்கள் இப்படத்திலிருந்து விலகிவிட்டனர்.

தற்போது இதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மருத்துவராக நடித்துவருகிறார். மேலும் அவருடன் நடிகை சிம்ரன் (Simran) மற்றும் ராஷி கன்னா (Rashi Khanna) இணைந்து நடித்துவருகிறார்கள். அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய சிம்ரன், தர்மன் படத்தில் நடிப்பது குறித்து சிம்ரன் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: ஜன நாயகன் படத்தை எடுப்பதைவிட வெளியிடவே சிரமமாக இருந்தது – கே.வி.என். வெங்கட் நாராயணன்

தர்மன் திரைப்படத்தில் நடிப்பது குறித்து பகிர்ந்த நடிகை சிம்ரன்:

அந்த பேட்டியில் பேசியிருந்த சிம்ரன், “மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகை. இவ்வளவு தன்னலமற்ற மற்றும் பணிவான ஒருவரை நான் பார்த்ததே இல்லை., கர்வம் இல்லை, அகந்தை இல்லை, திமிர் இல்லை. அவர் என் முன்மாதிரிகளில் ஒருவர். இந்த வாய்ப்பு கிடைத்தபோது என்னால் நம்பவே முடியவில்லை.. பேட்ட படம் உண்மையிலேயே நன்றாக இருந்தது.

இதையும் படிங்க: வெற்றிகரமாக 2வது வாரத்தில்.. புது போஸ்டரை பகிர்ந்த ஜன நாயகன் படக்குழு!

ஆனால் அது ஒரு முன்னோட்டம் மட்டுமே. நான் அவரைச் சந்திக்கும் போதெல்லாம், பேட்ட படத்தில் பணியாற்றியதை விட உங்களுடன் நான் இன்னும் அதிகமாகப் பணியாற்ற வேண்டும் என்று அவரிடம் கூறுவேன். இப்போது, ​​எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கமல் சாரின் தயாரிப்பில், இது ஒரு சரித்திரம், மேலும் நான் அதில் ஒரு அங்கம், மகிழ்ச்சியாக உணர்கிறேன் என தெரிவித்துள்ளார்.

தர்மன் திரைப்படம் குறித்து படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:

தர்மன் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தில் சிம்ரன் தலைவர் ரஜினிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துவரும் நிலையில், இப்படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுவருகிறது. இன்னும் இப்படத்தின் ஷூடிங் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியிடவேண்டும் என படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.

Follow Us