AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Dharman: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?

Director Ashwath Marimuthu X Post: ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் வரையிலும் மிகவும் பிரபலமானவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பிலும், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்திலும் தர்மன் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தின் கதை குறித்து தெளிவான விளக்கத்தை அஸ்வத் தெரிவித்துள்ளார்.

Dharman: குட் டாக்டர் வெப் தொடரின் கதையில் உருவாகிறதா ரஜினியின் தர்மன் திரைப்படம்? அஸ்வத் மாரிமுத்து சொன்ன பதில் என்ன தெரியுமா?
ரஜினிகாந்த் தர்மன் படத்தின் கதைImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 26 Jun 2026 18:31 PM IST

தமிழில் ஓ மை கடவுளே (Oh My Kadavule) என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் அஸ்வத் மாரிமுத்து (Ashwath Marimuthu). இவருக்கு தனது முதல் படமே பிரம்மாண்ட ஓப்பனிங்கை கொடுக்க, அடுத்ததாக இயக்கிய படம் டிராகன். இதில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர் மற்றும் அனுபமா உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இந்த படமும் எதிர்பாராத வரவேற்பைப் பெற்று ரூ125 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்தை அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து 3வது இயக்கம் படம்தான் தர்மன் (Dharman). இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Suparstar Rajinikanth) நாயகனாக நடிக்க, அவருடன் சிம்ரன் (Simran) மற்றும் ராசி கண்ணா (Rashi Khanna) போன்ற பிரபலங்களும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் அறிமுக வீடியோ மற்றும் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இதுவரையிலும் நடித்திடாத டாக்டர் வேடத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் பரவிவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அந்த கதை குறித்து பரவும் பதிவு ஒன்றிற்கு அஸ்வத் மாரிமுத்து ரியாக்ட் செய்துள்ளார்.

இதையும் படிங்க: அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

ஹாலிவுட் குட் டாக்டர் வெப் தொடர்ந் கதைதான் தர்மன் பட கதையா:

ஹாலிவுட் சினிமாவில் அனைத்து மக்கள் மத்தியிலும் பிரபலமான வெப் தொடராக இருந்து வந்தது குட் டாக்டர். இந்த வெப் தொடரின் ஹீரோ ஆட்டிசம் என்ற நரம்பியல் நோயால் படகிக்கப்பட்டவர். சிறுவயதிலிருந்து டாக்டர் ஆகவேண்டும் என்றார் ஆசையில் இருந் அவர், டாக்டரான பிறகு அனைவராலும் மதிக்கப்படாதது குறித்த ஒரு எமோஷனல் மற்றும் அருமையான கதையில் இந்த வெப் தொடர் இருக்கும்.

இதையும் படிங்க: எதிர்பாராத டுவிஸ்ட்.. முக்கோண காதல் கதையில் ஒரு அழகான படம்.. மடோனா செபாஸ்டியனின் ஹார்டின் படம் எப்படி இருக்கு?

இந்த தொடரின் கதையை மையப்படுத்தியே தர்மன் பட கதையும் இருக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், அதை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து மறுத்துள்ளார். அவ்வாறு பரவும் பதிவை குறிப்பிட்டு , “இது தவறான தகவல்” என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தர்மன் பட கதை குறித்து தவறாக பரவும் பதிவிற்கு ரியாக்ட் செய்த அஸ்வத் மாரிமுத்து :

தற்போது தர்மன் படத்தின் ஷூட்டிங் தொடங்கியிருக்கும் நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதற்கு அனிருத் இசையமைக்க, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை வரும் 2027ம் ஆண்டி கோடைக்காலத்தில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us