AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி

Aishwarya Lekshmi talks about Actress Rashmika Mandanna | தென்னிந்திய மொழிகளில் பிசியான நாயகியாக வலம் வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. இவர் சமீபத்தில் அளித்தப் பேட்டியில் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து பேசியது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த நடிகை மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது – நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி
ஐஸ்வர்யா லெக்‌ஷ்மிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 26 Jun 2026 16:05 PM IST

மலையாள சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்தார் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி. அதனைத் தொடர்ந்து கடந்த 2019-ம ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் நாயகியாக நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தின் மூலம் இவர் தமிழக ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதிலும் குறிப்பாக மாமன் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி நடிப்பில் அடுத்ததகா தமிழ் சினிமாவில் வெளியாக உள்ள படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி குஸ்தி வீராங்கனையாக நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராஷ்மிகா மந்தனா மாதிரி என்னால் ஒருநாளும் செய்ய முடியாது:

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா லெக்‌ஷ்மி சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகை ராஷ்மிகா மந்தனா குறித்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, எல்லோரும் ராஷ்மிகா மந்தனா ஆகிவிட முடியாது. ராஷ்மிகா செய்வதை என்னால் செய்ய முடியாது. அவர் மிகுந்த நளினத்துடன் நடிக்கிறார்; அவரது படங்களில் அவர் செய்யும் விஷயங்கள் எளிதானவை அல்ல. அவர் பல வணிகரீதியான கதாபாத்திரங்களிலும், அதே சமயம் பல்வேறு வகையான திரைப்படங்களிலும் நடித்துள்ளார். ராஷ்மிகாவைப் போல என்னால் நடனமாட முடியாது என்றும் அவர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read… நான் அந்த கதாப்பாத்திரத்தின் நடிக்க யோசிக்கல – அர்ஜுன் தாஸ் சொன்ன விசயம்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பத்ம பூஷன் விருது பெற்ற மம்முட்டி… கொண்டாடிய ஓம் படக்குழுவினர்

Follow Us