பத்ம பூஷன் விருது பெற்ற மம்முட்டி… கொண்டாடிய ஓம் படக்குழுவினர்
OM movie team celebrate Mammootty for Padma Bhushan award | மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் மம்முட்டி. இவருக்கு மத்திய அரசு சார்பில் சமீபத்தில் பத்ம பூஷன் விருது வழங்கி அவரை கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலையாள சினிமாவில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உச்ச நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய மொழிப் படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதன்படி நடிகர் மம்முட்டி தமிழ் மொழியில் அதிக அளவில் நடித்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் மலையாள சினிமாவிற்கு அடுத்தப்படியாக தமிழ் மொழியில் நடிகர் மம்முட்டி நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலையாள சினிமா நாயகனாக இருந்தாலும் தமிழ் மக்கள் இவரை தமிழ் சினிமா நடிகராகவே பார்த்து வருகின்றனர். அப்படி தான் இருக்கும் நடிகர் மம்முட்டியின் நடிப்பும்.
இப்படி மக்களால் கொண்டாடப்படும் நடிகர் மம்முட்டியை திரைத்துறையும் அரசும் கொண்டாடத் தவறியதில்லை என்பது நிதர்சனமான உண்மை. அந்த வகையில் சமீபத்தில் மத்திய அரசு நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தது. இதற்கு திரைத்துறையில் உள்ளவர்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஓம் படக்குழுவினரும் மம்முட்டிக்கு கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




மம்முட்டியை கொண்டாடிய ஓம் படக்குழுவினர்:
நடிகர் தனுஷ் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் படம் ஓம். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி வரும் இந்தப் படத்தில் நடிகர் மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். பேரன்பு படத்தை தொடர்ந்து நடிகர் மம்முட்டி தற்போது ஓம் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஓம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது கிடைத்ததை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வாழ்த்தியது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
Also Read… அந்த பெண் 100 பார்வதிக்கு சமம் – பூ படம் குறித்து பேசிய இயக்குநர் சசி
ஓம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Celebrating with the legend on the sets ⭐@dhanushkraja and team #OM congratulated Megastar @mammukka for his Padma Bhushan award, on the sets.@Rajkumar_KP @wunderbarfilms @RTakeStudios @Sai_Pallavi92 @sreeleela14 @SaiAbhyankkar @Shra2309 @azy905 @theSreyas @sandy_sashr… pic.twitter.com/GJCnVF0w2A
— Wunderbar Films (@wunderbarfilms) June 25, 2026
Also Read… பாலன் படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் நான் முழுமையாக மீளவில்லை – நடிகர் சூர்யா