AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் அமைதியாகவும் அதிகம் பேசாதவராகவும் மாற அதுதான் காரணம் – தாய் ஷோபா சந்திரசேகர் ஓபன் டாக்!

Shoba Chandrasekhar explained why Vijay was quieter and reserved | தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ் நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் அவர்கள் குறித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

விஜய் அமைதியாகவும் அதிகம் பேசாதவராகவும் மாற அதுதான் காரணம் – தாய் ஷோபா சந்திரசேகர் ஓபன் டாக்!
தாய் ஷோபா சந்திரசேகர் உடன் தளபதி விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 23 Jun 2026 17:13 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக வலம் வந்தவர் நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவர் தற்போது தமிழ் நாட்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி 2026-ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தளபதி விஜய் வெற்றிப் பெற்றார். இது தமிழக அரசியலில் மட்டும் இன்றி ஒட்டுமொத்த இந்திய அரசியலையும் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து தமிழ் நாட்டின் அரசியல் திரைப்படங்களில் அப்டேட் போல தினம் தினம் மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. தளபதி விஜயின் அரசியல் வருகைக்கு பிறகு அரசியல் குறித்து பேசுவது மக்களிடையே அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி தொடர்ந்து தமிழக அரசியல் தற்போது மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று தளபதி விஜய் தனது 52-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்கு பிரபலங்களும் ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். இப்படி இருந்த நிலையில் தளபதி விஜயின் தயாயார் ஷோபா சந்திரசேகர் விஜய் குறித்து பேட்டியில் பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் அமைதியாகவும் அதிகம் பேசாதவராகவும் மாற அதுதான் காரணம்:

தளபதி விஜய் சினிமாவில் நாயகனாக மிகவும் உற்சாகமானவராகவும் நடிப்பார். ஆனால் சொந்த வாழ்க்கையில் அவர் மிகவும் அமைதியானவராகவும் அதிகம் பேசாதராவகவுமே இருப்பார். இது அவரது இயல்பு என்று பலரும் நினைத்து கொண்டு இருந்தனர். ஆனால் அவர் அப்படி இருக்க என்ன காரணம் என்பது குறித்து அவரது தாயார் ஷோபா சந்திரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு

அதன்படி ஷோபா சந்திரசேகர் பேசியபோது தளபதி விஜய் பிறந்ததில் இருந்து அப்படி அமைதியானவராகவும் அதிகம் பேசாதராவகவும் இல்லை. அவரது தங்கை மறைந்த பிறகே அவர் அப்படி மாறிக்கொண்டார் என்று ஷோபா சந்திரசேகர் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே மட்டும் இன்றி மக்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் விஜய் தனது தங்கையின் மீது எவ்வளவு பாசமாக உள்ளார் என்று பேசி வருகின்றனர். இது தற்போது வைரலாகி வருகின்றது.

Also Read… மகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லும் அப்பா… ஓடிடியில் வெளியாகி உள்ள த்ரிஷ்யம் 3 படத்தின் விமர்சனம் இதோ!

Follow Us