AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Vijay Birthday: நடிகர் டூ முதல்வர்.. தொடரும் சாதனைகள்.. முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!

CM Joseph Vijay 52nd Birthday: கோலிவுட் சினிமாவில் உச்ச நாயகனாக கலக்கிவந்தவர் முதல்வர் விஜய். சினிமாவில் தனது உச்சத்தை தொட்டு, பின் மக்களின் உச்சத்திற்காக அரசியலில் இறங்கினார். இவர் இன்று தனது 52வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிவரும் நிலையில், அவர் கடந்துவந்த பாதை மற்றும் மக்களின் தீர்ப்பில் அவர் முதல்வரானது குறித்து விவரமாக காணலாம்.

Vijay Birthday: நடிகர் டூ முதல்வர்.. தொடரும் சாதனைகள்.. முதல்வர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்!
முதல்வர் விஜய் பிறந்தநாள்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2026 07:15 AM IST

தமிழ் திரைப்பட இயக்குநர் எஸ்.ஏ.சந்திர சேகரின் (S. A. Chandrasekhar) மகனாக பிறந்து, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தவர் முதல்வர் ச.ஜோசப் விஜய் ( Chief Minister C. Joseph Vijay). இவர் கடந்த 1980-களிலே சினிமாவில் நுழைந்துவிட்டார். பின் 1992ம் ஆண்டில் எஸ்.ஏ.சந்திரசேகரின் இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” (Naalaiya Theerpu) என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தளபதி விஜய் வெறும் ஹீரோ மட்டுமல்ல, அவர் சினிமாவில் பாடகராகவும் பல பாடல்களை பாடியுள்ளார். தளபதி விஜய்யின் தாய் ஷோபா பாடகி என்ற நிலையில், அவரின் திறமையையும் தளபதி கற்றுக்கொண்டார். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.

பின் விஜயகாந்தின் (Vijayakanth) செந்தூரபாண்டி (1993) என்ற படத்தின் மூலம் பிரபலமானார். இதையடுத்து தொடர்ந்து படங்களில் நாயகனாக நடித்து மக்களுக்கு நெருக்கமானார். இதையடுத்து வசீகரா, கில்லி, திருப்பாச்சி மற்றும் சிவாகாசி போன்ற படங்களின் மூலம் பிரபலம் கிடைத்தது.

இதையும் படிங்க: அது எனக்கு மகிழ்ச்சியான தொல்லையாக இருந்தது.. ரசிகர்கள் குறித்து தளபதி விஜய் சொன்ன விஷயம்!

சினிமாவில் பெரிய ஹீரோ என்ற அந்தஸ்து:

இதையடுத்து தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய ஹீரோ என்ற பிரபலத்தை இவருக்கு கொடுத்த படம் துப்பாக்கி. 2012ம் ஆண்டில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இப்படம் வெளியாகியிருந்த நிலையில், ஆக்ஷன் நாயகனாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். இதன் பிறகு தலைவா, கத்தி, சர்க்கார், மெர்சல் மற்றும் பல அரசியல் வசனங்கள் இடம்பெற்றிருந்த படங்களில் நடித்திருந்தார். இது இவருக்கு பெரிய நடிகர் என்றார் அந்தஸ்தை கொடுத்தது. இதை கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்துக்கொண்டார். இதன் மூலமாகவே அரசியலில் இவரின் ஆர்வம் அதிகமாக உள்ளது என ரசிகர்கள் புரிந்துகொண்டனர். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் கிடைத்ததும் ரசிகர்கள் கூட்டம் பின் ரசிகர்கள் மன்றமாகவும் மாறியது.

ரசிகர்கள் மன்றம் டூ தமிழக வெற்றிக் கழகம் :

தொடர்ந்து சினிமாவிலும் அரசியல் மற்றும் மக்களின் பிரச்சனைகளை பேசக்கூடிய படங்களின் மூலம், மேலும் மக்களுக்கு நெருக்கமானார் தளபதி விஜய். இதையடுத்து, தனது ரசிகர்கள் மன்றத்தை கட்சியாக்க சிந்தித்தார். நடிகராக இருக்கும்போதும், மக்களின் பிரச்சனைகளுக்காக குரல்கொடுத்திவந்த நிலையில், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த கட்சி அறிவிப்பு மாநாட்டில் பல லட்சக்கணக்கான மக்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துகொண்டிருந்தனர். இவ்வாறு அவரின் ரசிகர் மன்றம் கட்சியாக மாறியது.

இதையும் படிங்க:அப்போதிருந்தே விஜய்யின் வளர்ச்சியை கூட இருந்து பார்த்திருக்கிறேன் – நடிகர் சூர்யா பகிர்ந்த விஷயம்!

தமிழக முதல்வராக ஜோசப் விஜய்:

2026ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், ஜோசப் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக கட்சியானது கிட்டத்தட்ட 108 டெப்பாசிட்டுகளை பெற்றிருந்தது. 234 தொகுதிகளில் 108 தொகுதிகளை பெற்று முதன்மை கட்சியாக திகழ்ந்தது. மேலும் வெற்றிபெற மொத்தம் 118 டெப்பாசிட்டுகள் தேவை என்ற நிலையில், இடதுசாரி காட்சிகளை இணைந்துகொண்டது. இவ்வாறு கடந்த 2026ம் ஆண்டு மே 10ம் தேதியில் தமிழக முதலமைச்சராக ச.ஜோசப் விஜய் பதவியேற்றிருந்தார். இவ்வாறு தனது திரைத்துறை முதல் மக்கள் துறை வரை தனது ஆளுமையை அவர் காட்டியிருக்கிறார். இன்று (22/06/2026) அவர் தனது 52வது பிறந்தநாளை தமிழக முதல்வராக கொண்டாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us