Atlee: படத்துக்காக விஜய் ரசிகர்-னு சொன்னேனா.. விஜய் சார் ரசிகனாக காரணம் இதுதான் – அட்லீ ஓபன் டாக்!
Atlees VIjay Fan Journey: பான் இந்திய பிரபல இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் அட்லீ. இவரின் இயக்கத்தில் தொடர்ந்து பிரம்மாண்ட பட்ஜெட் படங்ககள் வெளியாகிவருகிறது. இவர் ஆரம்பத்தில் ரஜினிகாந்தின் வெறியன் என தெரிவித்திருந்த நிலையில், விஜய் ரசிகனான காரணம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் அட்லீ (Atlee) தமிழ் சினிமாவில் அனைத்து இயக்குநர்களுக்கும் ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்றார் கூறலாம். சினிமாவில் ஆரம்பத்தில் உதவி இயக்குநராக தனது வாழ்க்கையை தொடங்கி, பின் இயக்குநராக படங்களில் பணியாற்றி, பல்வேறு விமர்சனங்களை பெற்றும் தற்போது பான் இந்திய இயக்குநர்களில் ஒருவராகவே மாறிவிட்டார். இவர் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான ராஜா ராணி (Raja Rani) என்ற திரைப்படத்தின் மூலமா சினிமாவில் இயக்குநராக அறிமுகம் செய்யப்பட்டார். தனது இயக்கத்தில் வெளியான முதல் படத்தின் மூலமாகவே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தார். அதன் பின் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) தெறி (Theri) என்ற திரைப்படத்திலும் பணியாற்றியிருந்தார்.
சொல்லப்போனால் இயக்குநர் அட்லீ, தளபதி விஜய்யுடன் தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மொத்தம் 3 படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார். அந்த விதத்தில் இவர் விஜய் படங்களை இயக்குவதற்கு முன், தீவிர ரஜினிகாந்த் வெறியன் என சொல்லியிருந்த நிலையில், தற்போது விஜய்யின் ரசிகர் என சொல்ல காரணம் என்ன என்பது குறித்து அவர் தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க: அஜித் குமாரின் அந்த ஹிட் படத்தில் கமல் சார் தான் முதலில் நடிக்க இருந்தது – இயக்குநர் ஓபன் டாக்
இயக்குனர் அட்லீயின் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
விஜய்யின் ரசிகராக இருக்க காரணம் என்ன என்பது குறித்து பேசிய அட்லீ:
முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில் அட்லீ, “நான் எப்படி விஜய் சாரின் ரசிகராக மாறினேன் என பலருக்கும் சந்தேகம். நான் முன்பு ரஜினியின் வெறியன் என சொல்லிவிட்டு, தற்போது படத்திற்காக விஜய்யின் ரசிகர் என கூறுகிறானே? என பலரும் விமர்சிப்பதை நான் பார்த்திருக்கிறேன். ஒரு ரசிகராக வேண்டும் என்றால், நான் நண்பன் படத்தில் பணியாற்றும்போது விஜய் சார் ரசிகன் இல்லை. நான் விஜய் சாருடன் இருக்க இருக்க, அவரின் அணுக்கள் மற்றும் அவர் பேசும் விதம் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் ரஜினி சாருடனும் வேலை பார்த்திருக்கிறேன், விஜய் சாருடனும் வேலை பார்த்திருக்கிறேன்.
இதையும் படிங்க: பான் இந்திய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – ஜி.வி. பிரகாஷ்!
நான் விஜய் சாருடன் பணியாற்றும்போது, அவரின் சுய மனிதத்துவம் ரொம்பவே பிடித்திருந்தது. முன்பு நான் பார்ப்பதற்கு நன்றாக இருக்கமாட்டேன், பார்க்கும்போது நல்லாவே இல்லாதது போல இருப்பேன். நண்பன் பட ஷூட்டிங் முடிந்ததும், கேரவேனில் என்னிடம் பேசியிருந்தார், நல்லபடியாக படம் முடிந்தது, சூப்பர்” என சொன்னாரு. மேலும் விஜய் சார், என்ன உக்கார சொன்னாரு, அதன் பிறகு என்னிடம் பல விஷயங்களை பகிர்ந்தார். அப்போது எவர் என்னிடம், எனது முகத்தை, எனது நிறத்தை பார்க்காமல் பழகினார்” என அதில் அட்லீ தெரிவித்திருந்தார்.