AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GV Prakash: பான் இந்திய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – ஜி.வி. பிரகாஷ்!

GV Prakash About Pan Indian films: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் இருந்துவருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். இவர் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், அதில் சாய் அபயங்கர் பான் இந்திய படங்கள் பண்ணுவது குறித்து கேள்விக்கு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதுபற்றி விவரமாக பார்க்கலாம்.

GV Prakash: பான் இந்திய படம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை – ஜி.வி. பிரகாஷ்!
ஜி.வி. பிரகாஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Mar 2026 19:47 PM IST

கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டார்லிங் (Darling) என்ற படத்தின் மூலம் நடிகராக சினிமாவில் நுழைந்தவர் ஜி.வி.பிரகாஷ் (GV. Prakash Kumar). இவர் அதற்கு முன் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக படங்களில் பணியாற்றிவந்தார். இவரின் இசையமைப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் இசையமைப்பில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் போன்ற பல்வேறு நடிகர்களின் படங்களும் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்னிந்திய மக்கள் மத்தியில் நடிகராகவும், இசையமைப்பாளராகவும் பிரபலமாகி இருக்கிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம்தான் ஹேப்பி ராஜ் (Happy Raj).

தந்தை மகன் எமோஷனல் கதைக்களத்தில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த வகையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த இவர், பான் இந்திய படங்கள் (Pan Indian Movies) குறித்து தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: யூத் பட வெற்றி.. கண்ணீர் மல்க கென்னை அரவணைத்த தாய் கிரேஸ் – வைரலாகும் வீடியோ!

பான் இந்திய திரைப்படங்கள் பற்றி தனது கருத்தை வெளிப்படுத்திய ஜி.வி. பிரகாஷ் குமார்:

அந்த நேர்காணலில் தொகுப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம், சாய் அப்யங்கர் அல்லு அர்ஜூனுடன், அட்லீயின் இயக்கத்தில் பான் இந்திய படத்தின் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். உங்களுக்கு பான் இந்திய படம் செய்யும் பிளான் எதாவது இருக்கா? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஜி.வி. பிரகாஷ், “நான் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தனி தனியாக படங்களில் பணியாற்றிவருகிறேன். நான் பான் இந்திய படங்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் நல்ல படங்களை செய்து தேசிய விருதுகளை பெற்றிருக்கிறேன்.

இதையும் படிங்க: அரசன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ!

சமீபத்தில் SIR படத்திற்காக தேசிய விருதை பெற்றிருந்தேன். பான் இந்திய விருதையும் பெற்றுள்ளேன். ஒரே நேரத்தில் எல்லா மொழிகளிலும், இசையமைத்து, அதை பான் இந்திய படம் என்று குறிப்பிடுவதில் துளியும் நம்பிக்கை இல்லை” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

ஹேப்பி ராஜ் திரைப்படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு:

அறிமுக இயக்குநர் மரியா இளஞ்செழியன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ், ஜார்ஜ் மரியான், ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் அப்பாஸ் போன்ற பிரபலங்கள் நடித்துள்ள படம்தான் ஹேப்பி ராஜ். இப்படம் கடந்த 2026 மார்ச் 27ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிவரும் நிலையில், பாசிட்டிவ் விமர்சனங்கள் பெற்றுவருகிறது.

Follow Us