Ken Karunaas: யூத் பட வெற்றி.. கண்ணீர் மல்க கென்னை அரவணைத்த தாய் கிரேஸ் – வைரலாகும் வீடியோ!
Ken Karunaas Emotional Video: கென் கருணாஸின் அருமையான படமாக சமீபத்தில் வெளியானது யூத். இந்த படமானது வெளியாகி திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. அந்த விதத்தில் வசூலில் பெரும் வெற்றி பெற்றிருந்த நிலையில், கென் கருணாஸை அவரின் தாய் கிரேஸ் கண்ணீர் மல்க கட்டியணைத்து பாராட்டிய வீடியோ இணையத்தில் பரவிவருகிறது.
நடிகர் கருணாஸ் (Karunaas) மற்றும் பாடகி கிரேஸின் (Grace) மகன்தான் கென் கருணாஸ் (Ken Karunaas). இவர் தனது சிறுவயதிலே சினிமாவில் குழந்தை நட்சத்திரமான நடிக்க தொடங்கியிருந்த நிலையில், வெற்றிமாறன் (Vetrimaaran), தனுஷ் (Dhanush) மற்றும் விஜய் சேதுபதி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். மேலும் உதவி இயக்குநராகவும், தனுஷுடன் படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் இவர் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமாகியுள்ள முதல் திரைப்படம்தான் யூத் (Youth). இப்படமானது கடந்த 2026 மார்ச் 19ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் கென் கருணாஸுடன் இணைந்து பல்வேறு நடிகர்கள் இணைந்து நடித்திருந்தனர். திரையரங்குகளில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று, வசூலிலும் சாதனை படைத்துவருகிறது.
அந்த விதத்தில் தற்போது திரையரங்குகளில் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளது. அந்த விதத்தில் தனது வெற்றியை கென் கருணாஸின் குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தனது வெற்றியை தனது தாய் கிரேஸிடம் தெரிவிக்கும் விதத்தில் கென் கருணாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவரின் தாய் கண்ணீர் மல்க கென் கருணாஸை கட்டியணைத்து தனது பாசத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: லீடர் பட விழாவில் அறந்தாங்கி நிஷாவை கடுமையாக சாடிய விடிவி கணேஷ்!
யூத் திரைப்பட வெற்றியை குடும்பத்துடன் கென் கருணாஸ் கொண்டாடியது தொடர்பான வீடியோ:
I never dreamt of numbers… I only dreamt of this … my amma is proud ♥️ pic.twitter.com/Ee0zXUa5OU
— Ken Karunaas (@KenKarunaas) March 30, 2026
இந்த வீடியோவில் கென் கருணாஸ், தனது குடும்பத்துடன் யூத் பட வெற்றியை கொண்டாடவும் விதத்தில் அவர் இந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அவரை பாராட்டும் விதத்தில் அவர் குடும்ப நபர்கள் அனைவரும் வாழ்த்தி கட்டியணைத்திருந்த நிலையில், அவரின் தாய் கிரேஸையும் கென் சந்தித்திருந்தார். மகன் கென் கருணாஸை பார்த்தவுடன் தாய் கிரேஸ், அவரை கட்டியணைத்து கண்ணீர் மல்க பாராட்டியிருந்தார்.
இதையும் படிங்க: இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் மீது அடுக்கடுக்கான புகார்களை வைத்த மதராஸி பட தயாரிப்பாளர்!
கிரேஸ் ஏற்கனவே, யூத் பட ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சியோடு பேசுகையில், யூத் படம் மக்கள் மத்தியில் வரவேற்கப்படுமா?, எனது மகனின் முதல் படம் நல்லா வருமா? என பயமாக இருப்பதாக தெரிவித்திருந்தார். அதற்கு நடிகர் தனுஷ் ஆறுதல் தெரிவித்து, நிச்சயம் படம் வெற்றியடையும் என பேசியிருந்தார். அதுபோலவே யூத் படமானது மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இப்படமானது சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல வசூலித்துள்ள நிலையில், இன்னும் அதிகம் வசூல் செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



