AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Andrea Jeremiah: அரசன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ!

Andrea Jeremiah join Arasan Movie Shooting: தென்னிந்திய மக்கள் மத்தியில் சிறந்த பாடகி மற்றும் நடிகையாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா. இவர் தனுஷின் வட சென்னை படத்தில் மிகவும் சிறப்பான வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதன் மற்றொரு படமான அரசன் படத்தின் ஷூட்டிங்கிலும் இணைந்துள்ளார்.

Andrea Jeremiah: அரசன் படத்தின் ஷூட்டிங்கில் இணைந்த ஆண்ட்ரியா – வைரலாகும் வீடியோ!
அரசன் படத்தில் இணைந்த ஆண்ட்ரியாImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 29 Mar 2026 17:28 PM IST

நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea Jeremiahதென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் மாஸ்க் (Mask). இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) தயாரிப்பில், நடிகர் கவினின் (Kavin) நடிப்பிலும் இப்பட வெளியாகியிருந்தது. இந்த படமானது ஆண்ட்ரியாவுக்கு நல்ல வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். இதனை தொடர்ந்து இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்களுக்கும் மேல் வெளியாகாமல் உள்ளது. வெற்றிமாறனின் தயாரிப்பில் மனுஷி (Manushi), இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 (Pisaasu 2)போன்ற படங்களும் இன்னும் வெளியாகவில்லை.

அந்த விதத்தில் இவர் சிலம்பரசன் (Silambarasan) நாயகனாக நடிக்கும் அரசன் (Arasan) படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டிருந்தது. அந்த விதத்தில் தற்போது சென்னையில் நடைபெற்றுவரும் ஷூட்டிங்கில் நடிகை ஆண்ட்ரியா இணைந்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: வெறும் பாடகி மட்டுமில்ல.. இனி பிரபல நடிகையும் கூட.. சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ள ஜோனிடா காந்தி!

அரசன் படத்தின் ஷூட்டிங்கில் ஆண்ட்ரியா இணைந்தது குறித்து வைரலாகும் வீடியோ பதிவு:

வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடித்துவரும் படம்தான் அரசன். இந்த படமானது தனுஷின் வட சென்னை படத்தின் டைம் லைன் கதைக்களத்தில் நடக்கும் மற்றொரு கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுவருகிறது. இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. வி கிரியேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு, அனிருத் இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலமாகதான் முதல் முதலில் வெற்றிமாறன் மற்றும் சிலம்பரசனுடன் பணியாற்றிவருகிறார். இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக தயாராகிவருகிறதாம்.

இதையும் படிங்க: கதைக்காக அல்ல…தேதி கிடைக்கல – ஜி.வி.பிரகாஷ் தவறவிட்ட படங்கள் என்னென்ன தெரியுமா?

இந்த படத்தில் வட சென்னை படத்தில் நடித்த பல நடிகர்கள் இணைந்து நடித்துவருவதாக கூறப்படுகிறது. சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா,  கிஷோர்,  அமீர், சாய் தீணா, ராதா ரவி என பல்வேறு நடிகர்கள் இணைந்து நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங்காகனது இன்னும் சில வாரங்களில் முழுமையாக நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் வரும் 2026 ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுவருகிறது. அந்த வகையில் வெற்றிமாறனின் இயக்கத்தில் இந்த படமானது வட சென்னை படத்திற்க்கு பிறகு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வெற்றிமாறன் சூர்யாவுடன் வாடிவாசல் பட ஷூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us