Andrea jeremiah: அதெல்லாம் வாழ்க்கையில் ஒருமுறைதான் பண்ணமுடியும்… ஆண்ட்ரியா சொன்ன விஷயம்!
Andrea Jeremiah on Aayirathil Oruvan 2: தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் தொடர்ந்த சினிமாவில் படங்களில் நடித்துவரும் நிலையில், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணலில் பேசிய இவர், ஆயிரத்தில் ஒருவன் படம் குறித்து மனம் திறந்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகை மற்றும் பாடகியாக இருந்துவருபவர் ஆண்ட்ரியா ஜெரெமையா (Andrea jeremiah). இவர் தொடர்ந்து பாடல்கள் பாடுவதை தொடந்து சினிமாவில் முக்கிய வேடங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்தான் மாஸ்க் (Mask). இந்த படத்தில் ஆண்ட்ரியா முக்கிய வில்லியாக நடித்திருந்தார். இதில் நடிகர் கவின் ராஜ் (Kavin Raj) ஹீரோவாக நடித்திருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பையே பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்ததாக புதிய படங்களிலும் இவர் ஒப்பந்தமாகிவருகிறார். மேலும் வட சென்னை (Vada Chennai) உலகத்தில் உருவாகிவரும் மற்றொரு படமான அரசன் திரைப்படத்திலும், இவர் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சிலம்பரசன் (Silambarasan) கதாநாயகனாக நடித்துவரும் நிலையில், இதில் நடிகை ஆண்ரியா சந்திரா வேடத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஆண்ட்ரியா ஜெரெமையா, “ஆயிரத்தில் ஒருவன்” (Aayirathil oruvan) படத்தின் தொடர்ச்சியில் நடிப்பது குறித்து மனம் திறந்துள்ளார்.




இதையும் படங்க: ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் சீரிஸ் ரசிகர்களால் முடங்கிய நெட்ஃபிளிக்ஸ்… என்ன நடந்தது?
ஆயிரத்தில் ஒருவன் தொடர்ச்சிகளில் நடிப்பது குறித்து மனம் திறந்த ஆண்ட்ரியா ஜெரெமையா :
அந்த நேர்காணலில் பேசிய ஆண்ட்ரியா, அதில் தொகுப்பாளர் அவரிடம், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படத்தில் நீங்க நடிப்பீங்களா? என கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ஆண்ட்ரியா, ” நான் வரல பா, அந்த மாதிரி படத்தை வாழ்க்கையில் ஒரு தடவைதான் பண்ண முடியும். மேலும் இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடல் என்றால் மாலை நேரம் என பாடல்தான். அந்த பாடல் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெறவில்லை.
இதையும் படிங்க: தனது ரேஸ் காருடன் அஜித் குமார் கொடுத்த மாஸான போஸ்… இணையத்தில் வைரலாகும் போட்டோ
அது லவ் பாடல் என்பதால் இந்த படத்திற்கு செட் ஆகவில்லை. இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் தான் அடம்பிடித்து பண்ணியிருந்தார். மேலும் இப்பாடலை பாடும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. ஆனால் இந்த படத்தில் எனக்கு பிடித்த பாடலில் இது ஒன்று” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.
மாஸ்க் திரைப்படம் குறித்து நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா வெளியிட்ட எக்ஸ் பதிவு :
Thank you @thisisysr! See you onstage soon ♥️ https://t.co/XEBXlF2pMl
— Andrea Jeremiah (@andrea_jeremiah) November 22, 2025
இந்த படத்தி அடுத்தாக ஆண்ட்ரியாவின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வெளியாகாமல் இருக்கிறது. அதில் வெற்றிமாறனின் தயாரிப்பில் உருவான படம் மனுஷி. மேலும் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் உருவான பிசாசு 2 திரைப்படம். இந்த படங்கள் சென்சார் பிரச்சனைகள் காரணமாக இன்னும் வெளியாகாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.