மகாநதி படத்திற்கு பின் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.. 6 மாதம் சும்மாதான் இருந்தேன்- கீர்த்தி சுரேஷ்பேச்சு!
Keerthy Suresh About Mahanati: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர்தான் கீர்த்தி சுரேஷ். இவரின் நடிப்பில் விரைவில் ரிவால்வர் ரீட்டா என்ற படமானது திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தொடர்பான நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், மகாநதி படத்திற்கு பின் வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்துவருபவர் கீர்த்தி சுரேஷ் (keerthy Suresh). இவரின் நடிப்பில் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியாக ரகு தாத்தா (Ragu Thaththa) என்ற படமானது வெளியானது. இந்த படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இதன் பின் இந்தியில் அட்லீயின் தயாரிப்பில் வெளியான பேபி ஜான் என்ற திரைப்படத்தில் இவர் இணைந்து நடித்திருந்தார். இந்நிலையில் இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு பின் வெளியீட்டிற்கு தயாராகியிருக்கும் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஜே.கே.சந்துரு (JK. Chandru) இயக்க, பேஷன் ஸ்டூடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படம் வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய கீர்த்தி சுரேஷ், மகாநதி (Mahanati) திரைப்படத்திற்கு பின் தனக்கு 6 மாதங்கள் வாய்ப்புகள் இல்லாமல் விஷயம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.




இதையும் படிங்க: பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பிரபல நடிகை… இணையத்தில் வைரலாகும் வீடியோ
மகாநதி படத்திற்கு பின் பட வாய்ப்புகள் குறைந்தது குறித்து கீர்த்தி சுரேஷ் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணலில் பேசிய கீர்த்தி சுரேஷ் அதில், “மகாநதி படத்தின் ரிலீசிற்கு பின், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்கும் மேல் எனக்கு இந்தத் படங்களிலும் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதை சொன்னால் யாருமே நம்பமாட்டார்கள். யாரும் என்னிடம் படத்தின் கதையை சொல்லவில்லை, மேலும் என்மீது எந்த தவறும் இல்லாமல் இருந்ததால நானும் சோர்வடையவில்லை.
இதையும் படிங்க: நான் எப்போது புத்துணர்ச்சியாக இருக்க.. காலையில் எழுந்தவுடன் இதை மறக்காமல் செய்வேன்- சமந்தா கொடுத்த டிப்ஸ்!
மேலும் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் உருவாகிவருகிறது , அதனாலதான் இந்த தாமதம் என நான் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டேன். அந்த 6 மாத இடைவெளியில் என்னை நான் மேன்படுத்திக்கொண்டேன்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
ரிவால்வர் ரீட்டா படம் குறித்து கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த எக்ஸ் பதிவு :
Into the world of #RevolverRita 🔥#RevolverRitaTrailer
Tamil ▶️ https://t.co/EUAnI1lVUiTelugu ▶️ https://t.co/5tC20uxoLw@Jagadishbliss @Sudhans2017 @realradikaa @dirchandru @PassionStudios_ @TheRoute @RSeanRoldan @dineshkrishnanb @Cinemainmygenes @dhilipaction @mkt_tribe… pic.twitter.com/GiRNa1Pt0G
— Keerthy Suresh (@KeerthyOfficial) November 13, 2025
ரிவால்வர் ரீட்டா என்ற படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதியில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் விஜய் தேவரகொண்டவுடன் VD15 என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.