Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Keerthy Suresh: ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை இதுதான் – வெளிப்படையாக சொன்ன கீர்த்தி சுரேஷ்!

Keerthy Suresh About Revolver Rita:நடிகை கீர்த்தி சுரேஷின் நடிப்பில் தமிழில் 1 வருடத்திற்கு பின் வெளியாகும் திரைப்படம்தான் ரிவால்வர் ரீட்டா. இந்த படத்தில் இவர்தான் லீட் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் கதை எதை பற்றியது என்பது குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Keerthy Suresh: ரிவால்வர் ரீட்டா படத்தின் கதை இதுதான் – வெளிப்படையாக சொன்ன கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Nov 2025 17:36 PM IST

தென்னிந்திய சினிமாவில் பிரபல நாயகியாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் (Keerrthy Suresh). இவரின் நடித்த தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் கடந்த 2024ம் ஆண்டில் இவரின் நடிப்பில் இறுதியாக “ரகு தாத்தா” (ragu Thaththa) என்ற படம் வெளியானது. இந்த படத்தை அடுத்ததாக 2025ம் ஆண்டில் வெளியாக காத்திருக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita) . இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஜேகே சந்துரு இயக்கியுள்ளார். இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் லீட் ரோலில் நடிக்க, வில்லனாக இப்படத்தில் நடிகர் சுனில் (Sunil) நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் இவர்களுடன் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சென்ராயன், ஜான் விஜய் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் நடந்துவரும் நிலையில், இப்படத்தின் மைய கதை குறித்து கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த ரிவால்வர் ரீட்டா படமானது ஒரு நாள் இரவில் நடக்கும் ஒரு கதையை வைத்து உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி.. மக்களை எச்சரித்த படக்குழு!

ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் கதை குறித்து மனம்திறந்த கீர்த்தி சுரேஷ் :

சமீபத்தில் பேசிய நேர்காணல் ஒன்றில் நடிகை கீர்த்தி சுரேஷ், “ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் கதை ஒருநாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படமானது புதிய தருணங்கள் மற்றும் கதையை இருக்கமாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருக்கும் அற்புதமான புதிய விஷயங்கள் நிறைய உள்ளது.

இதையும் படிங்க: அபிஷன் ஜீவிந்த் – அனஸ்வரா ராஜனின் பட டைட்டிலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. டைட்டில் என்ன தெரியுமா?

மேலும் இப்படத்தில் பார்வையாளர்களுக்கு ஆச்சரியமான திருப்பங்களையும், படத்தை தனித்துவமாக உணர வைக்கும் தனித்துவமான காட்சிகளையும் எதிர்பார்க்கலாம்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ரிவால்வர் ரீட்டா திரைப்படத்தின் சென்சார் சான்றிதழ் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு :

இந்த படத்திற்கு சென்சார் படக்குழு யு/ஏ சென்சார் சான்றிதழை வழங்கியுள்ளது. இந்த படத்தின் ரிலீசிற்கு இன்னும் சில தினங்கள் மட்டுமே உள்ள நிலையில், ப்ரோமோஷன்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.