யூடியூபில் ‘100 மில்லியன்’ வியூஸைக் கடந்த ‘ஊரும் பிளட்’ பாடல்… நன்றி தெரிவித்து சாய் அபயங்கர் பதிவு!
Sai Abhyankkar Expresses Gratitude: தமிழ் சினிமாவில் கடந்த 2025 அக்டோபர் 17 ஆம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியான திரைப்படம்தான் டியூட். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க, சாய் அபயங்கர் இசையாமைத்திருந்தார். இவரின் இசையமைப்பில் இப்படத்தில் முதல் பாடலாக ஊரும் பிளட் என்ற பாடல் வெளியான நிலையில், இதுவரை மொத்தம் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் சென்சேஷனல் நாயகனாக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இறுதியக வெளியான திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம் 2025ம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 2025 அக்டோபர் 17 ஆம் தேதியில் உலகமெங்கும் வெளியானது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி திரைப்படமாக வெளியான நிலையில், பிரம்மாண்ட வரவேற்பை பெற்றிருந்தது. இதில், பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ (Mamitha Baiju) , சரத்குமார், ரோகிணி, ஹிருது ஹாரூன் போன்று பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இப்படம் எந்த அளவிற்கு பிரபலமோ அதை போல இப்படத்தின் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது. இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்திருந்தார்.
இவரின் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான முதல் படம் இதுதான். இந்நிலையில் இவரின் இசையமைப்பில் இப்படத்தின் முதல் பாடலாக வெளியானதுதான் “ஊரும் பிளட்” . இந்த பாடலானது யூடியூபில் சுமார் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில் சாய் அபயங்கர் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட புது அப்டேட்
ஊரும் பிளட் பாடல் 100 மில்லியன் வியூஸ் தொடர்பான சாய் அபயங்கர் வெளியிட்ட பதிவு :
Oorum blood hits 100 million 🙏🏻♥️… GIG love you all makkale 🫶🏼
— abhyankkar (@SaiAbhyankkar) November 21, 2025
இந்த பதிவில் அவர், “டியூட் பட ஊரும் பிளட் பாடல் சுமார் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதற்காக நன்றி மக்களே அந்த பதிவை வெளியிட்டுள்ளார். இத தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான கண்ணுக்குள்ள, மற்றும் சிங்காரி போன்ற பாடல்கள் இணையத்தில் ட்ரென்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது 20 வயதிலே இவ்வளவு பெரிய சாதனையை சாய் அபயங்கர் நிகழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கொலவெறி பாடல் இப்படிதான் உருவானது… தனுஷ் ஓபன் டாக்
சாய் அபயங்கரின் கைவசத்தில் இருக்கும் படங்கள்
இவரின் இசையமைப்பில் கிட்டத்தட்ட 5 படங்கள் கிட்ட உருவாகி வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ், சூர்யாவின் கருப்பு, சிலம்பரசனின் STR49, கார்த்தியின் மார்ஷல், சிவகார்த்திகேயனின் SK24 மற்றும் அட்லீயின் தயரிப்பில் ஒரு படம் என பல படங்களை தனது கைவசத்தில் வைத்துள்ளார். இந்த படங்கள் தொடந்து ஒவ்வொன்றாக தயாராகிவரும் நிலையில், இவருக்கும் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்புகளும் கூடிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.