Jana Nayagan: ஜன நாயகன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பெற்ற சூர்யா பட நிறுவனம்? வைரலாகும் தகவல்!
Jana Nayagan Update: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் தளபதி விஜய். இவரின் நடிப்பில் வரும் 2026ம் ஆண்டில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் திரைப்படம்தான் ஜன நாயகன். இந்த படத்தின் விற்பனை தொடர்பான விஷயங்கள் நடைபெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
நடிகர் தளபதி விஜய்யின்(Thalapathy Vijay) நடிப்பில் பான் இந்திய மொழிகளில் உருவாகிவரும் திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் அதிரடி ஆக்ஷ்ன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தை பிரபல இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்க, கேவிஎன் புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமானது தயரிட்டு வருகிறது. மேலும் இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இந்த படமானது விஜய்யின் கடைசி திரைப்படம் என குறிப்பிடப்படும் நிலையில், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துவருகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், படத்தின் ரிலீஸ் எப்போது எப்போது என ரசிகர்கள் ஏங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இப்படத்தின் விற்பனை தொடர்பான விஷயங்கள் நடைபெற்றுவருகிறது. அதில் ஜன நாயகன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர் நாக வம்சி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவரின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் கீழ்தான், சூர்யாவின் 46வது படம் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.




இதையும் படிங்க: சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்
ஜன நாயகன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமை தொடர்பான பதிவு :
#JanaNayagan Telugu distribution rights have been acquired by #Suriya46 producer Naga Vamsi’s Sithara Entertainments…🤝
In Cinemas JAN 9th, 2026 PONGAL#ThalapathyVijay #PoojaHegde pic.twitter.com/xFZ3asb3e8
— Movie Tamil (@_MovieTamil) November 19, 2025
ஜன நாயகன் படத்தின் இசைவெளியீட்டு விழா எங்கே எப்போது நடக்கிறது :
தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் இந்த படத்திற்கு மக்களிடையே மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்புகள் இருந்துவருகிறது. இப்படத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், நரேன், பிரியாமணி மற்றும் டீஜெய் உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், ரிலீஸிற்கு தயாராகிவருகிறது.
இதையும் படிங்க: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்… ஜன நாயகன் படத்தின் 2-வது சிங்கிள் ரிலீஸ் எப்போது? வைரலாகும் தகவல்
இப்படம் ஜனவரி 9ம் தேதியில் வெளியாகும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டுவிழா வரும் 2025 டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளதாம். ஜன நாயகன் படத்தின் ஆடியோ லான்ச் வரும் 2025 டிசம்பர் 27ம் தேதியில் மலேசியாவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறபடுகிறது. மேலும் இது குறித்து படக்குழு இன்னும் எந்தவித அறிவிப்புகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.