Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்

Actor Suriya New Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் தொடர்ந்து சினிமாவில் பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார். தொடர்ந்து தெலுங்கு சினிமா இயக்குநர்களிடையே கதையை கேட்டு வருகிறார் நடிகர் சூர்யா.

சூர்யாவிற்கு கதை சொன்ன சூர்யாஸ் சாட்டர்டே பட இயக்குநர் – உற்சாகத்தில் ரசிகர்கள்
சூர்யா, விவேக் ஆத்ரேயாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 20 Nov 2025 16:43 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான படம் மென்டல் மதிலோ. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து ப்ரோச்சேவரேவருரா, அண்டே சுந்தராநிகிக்கு, சரிபோதா சனிவாரம் என தொடர்ந்து படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் விவேக் ஆத்ரேயா. இதில் இருதியாக இயக்கிய அண்டே சுந்தராநிகிக்கு, சரிபோதா சனிவாரம் ஆகிய இரண்டு படங்களிலும் நடிகர் நானியை வைத்து இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் தெலுங்கு சினிமாவில் மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா முழுவதும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக இறுதியாக வெளியான சரிபோதா சனிவாரம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி நடிகர் நானியின் நடிப்பில் வெளியான சரிபோதா சனிவாரம் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் பட பாணியில் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் நானி உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், அபிராமி கோபிகுமார், அதிதி பாலன், பி. சாய் குமார், முரளி சர்மா, அஜய், ஜான்சி, சுப்ரீத், அஜய் கோஷ், சுபலேகா சுதாகர் ஆகியோர் இணைந்து நடித்து இருந்தனர். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் விவேக் ஆத்ரேயா அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் என்ற எண்ணம் ரசிகர்களிடையே இருந்தது.

சூர்யாவிடம் கதை சொன்ன இயக்குநர் விவேக் ஆத்ரேயா:

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் சூர்யாவின் 47-வது படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து தற்போது இயக்குநர் விவேக் ஆத்ரேயா சூர்யாவிடம் கதை சொல்லியதாகவும் இந்த கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் சூர்யா 46 படத்தின் ஷூட்டிங் – வைரலாகும் முக்கிய தகவல்

இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:

Also Read… குமுதா ஹேப்பி அண்ணாச்சி… இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் பார்ட் 2-ல் நடிக்கும் சாண்டி?