சூர்யா ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்… கருப்பு படம் குறித்து வெளியான முக்கிய தகவல்
Karuppu Movie Update: நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. இந்தப் படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் இது தொடர்பாக தற்போது அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கருப்பு. சூர்யா (Actor Suriya) நடிப்பில் முன்னதாக வெளியான ரெட்ரோ படத்தின் ஷூட்டிங்கில் இருக்கும் போதே கருப்பு படத்தின் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்தது. தொடர்ந்து பல மாதங்களாக படத்தின் படப்பிடிப்பு பணிகள் எப்போது முடியும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஒருவழியாக படத்தின் படப்பிடிப்பு முடிந்தது என்று அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர் அளித்தப் பேட்டி ஒன்றில் படம் பண்டிகை காலத்தில் தான் வெளியாகும் என்று தெரிவித்து இருந்தார். அவர் பேட்டி அளித்த போது அடுத்ததாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால் படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவில்லை. தொடர்ந்து படத்தில் இருந்து முதல் சிங்கிள் வீடியோவை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து படத்தில் சில காட்சிகள் படமாக்க வேண்டும் என்று தற்போது சென்னையில் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெற்று வருகின்றது. மேலும் கருப்பு படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்த அப்டேட்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவின் கருப்பு பட ஷூட்டிங்:
இந்த நிலையில் தற்போது சினிமா வட்டாரங்களில் கருப்பு படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதில், சூர்யாவின் கருப்பு படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது, விரைவில் அடுத்த பாடலையும் வெளியீட்டு தேதியையும் வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. உற்சாகமான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது தற்போது சூர்யா ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… ஓடிடி ரிலீஸ் தேதியை லாக் செய்தது பைசன் படக்குழு – உற்சாகத்தில் ரசிகர்கள்
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Sweet News for Suriya Fans! 🎉🔥
— Suriya’s #Karuppu is now in its final stages of shooting, and the team is gearing up to drop the next song and the release date very soon. Exciting updates incoming! 🎬✨
— #Suriya46 has moved into its last phase of filming, and the film’s…
— Movie Tamil (@_MovieTamil) November 18, 2025
Also Read… கருப்பு படத்திற்கு முன்னதாக வெளியாகிறதா சூர்யா 46 படம்? வைரலாகும் தகவல்