Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நகைச்சுவை உணர்வுகொண்ட கீர்த்தி… ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரைப் பாராட்டிய நானி!

Nani Praises Keerthy Suresh: தென்னிந்திய சினிமாவில் பேமஸ் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துவருபவர் நானி. தெலுங்கு சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவரும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இவர் சமீபத்தில் வெளியான கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரை பாராட்டியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

நகைச்சுவை உணர்வுகொண்ட கீர்த்தி… ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரைப் பாராட்டிய நானி!
கீர்த்தி சுரேஷைப் பாராட்டிய நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 14 Nov 2025 16:08 PM IST

தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் நானி (Nani). இவர் தொடர்ந்து மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து சினிமாவில் ஹிட் திரைப்படங்ககளை கொடுத்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட் 3 (HIT 3). இப்படமானது சூர்யாவின் (Suriya) ரெட்ரோ திரைப்படத்துடன் ஒரே நாளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தி பாரடைஸ் (The Paradise) என்ற படத்தில் அசத்தல் ஆக்ஷ்ன் நாயகனாக நடித்துவருகிறார். இவர் நடிகை கீர்த்தி சுரேஷுடன் (Keerthy Suresh) நான் லோக்கல் மற்றும் தசரா (Dhasara) போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார். அந்த வகையில் நடிகர் கீர்த்தி சுரேஷ் லீட் கதாநாயகியாக நடித்துள்ள படம்தான் ரிவால்வர் ரீட்டா (Revolver Rita).

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில், தெலுங்கு ட்ரெய்லரை பார்த்த நடிகர் நானி, கீர்த்தி சுரேஷின் நகைச்சுவை உணர்வை பாராட்டியுளளார். இது தொடர்பான பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சலிப்பே தட்டாத வாரணம் ஆயிரம்.. 17 ஆண்டுகளை கடந்தும் எவர்கிரீன்.. அப்படி என்ன ஸ்பெஷல்?

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரை பாராட்டிய நானி:

இந்த பதிவை பகிர்ந்த நடிகர் நானி, சிறப்பான நகைச்சுவை உணர்வு கொண்ட கீர்த்தி, இது போன்ற வித்தியாசமான கதைகளை இன்னும் அதிகமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அவர் அந்த பதிவில் கீர்த்தி சுரேஷை வாழ்த்தியுள்ளார். இது தெலுங்கு மக்களிடையேயும் கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா பட ட்ரெய்லரை பிரபலமாக்கியுள்ளது.

கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா திரைப்படம் :

கீர்த்தி சுரேஷ் முன்னணி நாயகியாக நடிக்கும் படம்தான் ரிவால்வர் ரீட்டா. இப்படத்தில் நடிகர்கள் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, சுனில், சென்றாயன் உட்பட பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துளளனர். இந்த் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்தது.

இதையும் படிங்க: காந்தா படமும் துல்கர் சல்மானின் நடிப்பில் ஹிட் அடித்ததா? எக்ஸ் விமர்சனம் இதோ

இப்படத்தின் ட்ரெய்லரில் இருப்பதைப் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தின் ஜானரில் இப்படமும் உருவாகியிருப்பது போல் உள்ளது. இந்த படமானது வரும் 2025 நவம்பர் 28ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது நிச்சயமாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.