பூஜையுடன் தொடங்கியது கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் படம்!
Keerthy Suresh and Mysskin: நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் இருவரும் இணைந்து புதிய படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளனர். இந்தப் படம் குறித்த தகவல்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில் தற்போது படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் (Actrees Keerthy Suresh) கடந்த 2000-ம் ஆண்டு முதல் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து 2002-ம் ஆண்டு வரை குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2013-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து சினிமாவில் 12-ம் ஆண்டுகள் நாயகியாக தன்னை நிலைநிறுத்திவைத்துள்ளார். மேலும் மலையாள சினிமாவில் இவர் நாயகியாக அறிமுகம் ஆகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய நாயகியாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் உப்பு கப்புறம்பு படம் வெளியானது. இந்தப் படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
காமெடியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து நேரடி ஓடிடி படங்களிலும் நடித்து வருகிறார். அதே நேரத்தில் திரையரங்குகளுக்கான படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழில் இவரது நடிப்பில் முன்னதாக ரிவால்வர் ரீட்டா படத்தின் பணிகள் நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியாகியுள்ளது.




கோர்ட் ரூம் ட்ராமவில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின்:
அறிமுக இயக்குநர் பிரவின் இயக்கத்தில் நடிகர்கள் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரம்ஸ்டிக்ஸ் புரடெக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. கோர்ட் ரூம் ட்ராமாவாக உருவாக உள்ள இந்தப் படத்தின் பூஜை இன்று நடைப்பெற்றுள்ளது.
மேலும் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒரு செஸ் போர்டில் இருக்கும் குதிரை மற்றும் ராஜாவின் சின்னத்தை வைத்துள்ளனர். இதன் மூலம் கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரின் கதாப்பாத்திரமும் மிகவும் வலிமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிலையில் படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
Also Read… Gatta Kusthi 2: மீண்டும் தொடங்கிய போட்டி.. ‘கட்டா குஸ்தி பார்ட் 2’ ஷூட்டிங் பூஜையுடன் தொடக்கம்!
கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் படத்தின் பூஜை புகைப்படங்கள் இதோ:
We marked the beginning of our much-anticipated project, Production No. 9 starring @KeerthyOfficial @DirectorMysskin, with a pooja ceremony today.@DrumsticksProd @SamCSmusic @vincentcinema @editor_prasanna #UmeshKrBansal @girishjohar #RaveenaDeshpaande @kejriwalakshay… pic.twitter.com/e4wDy2bsID
— Zee Studios South (@zeestudiossouth) September 3, 2025