AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

RJ Balaji: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. கருப்பு படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!

Karuppu Movie Update: துணை நடிகராக நுழைந்து, தற்போது இயக்குநராக சூர்யாவை வைத்து படத்தை இயக்கியுள்ளவர் ஆர்.ஜே.பாலாஜி. அந்த படம்தான் கருப்பு. இப்படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என அனைவரும் எதிர்பாராத நிலையில், அது குறித்து ஆர்.ஜே.பாலாஜி சூப்பர் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

RJ Balaji: கருப்பன் வரான் வழி மறிக்காதே.. கருப்பு படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
கருப்பு திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Mar 2026 21:05 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தொடர்ந்து மிக பிரம்மாண்டமான திரைப்படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் இவர் நடித்திருக்கும் புது படம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படத்தில் சூர்யா மற்றும் மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ளனர். இதன் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இது 20 வயது வித்தியாசத்தில் உள்ள காதலர்கள் குறித்த கதைக்களத்தில் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு முன் சூர்யாவின் நடிப்பில் வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம்தான் கருப்பு (Karuppu). இதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்கியுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

இதன் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டிலே தொடங்கிய நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படவில்லை. அந்த வகையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, கருப்பு படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என் அதெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 20 வயது வித்தியாசத்திலும் காதல்… வெளியானது சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர்!

கருப்பு திரைப்படம் குறித்து ஆர்.ஜே.பாலாஜி சொன்ன அப்டேட்:

சமீபத்தில் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. அந்த டீசரை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி அதை வாழ்த்தியிருந்தார். மேலும் “அன்பான ரசிகர்களே நெக்ஸ்ட் மண்டே (திங்கள் கிழமை) கருப்பு அப்டேட்” என அதில் தெரிவித்துள்ளார் தற்போது இது தொடர்பான பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. கருப்பு படம் அப்டேட் எப்போதுவரும் என எதிர்பார்துவந்த நிலையில், வரும் திங்கள் கிழமை 2026 மார்ச் 23ம் தேதியில் வெளியாகும் என அவர் தெரிவித்துள்ளார். தற்போது இந்த் பதிவானது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.

கருப்பு படத்தின் அப்டேட் குறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட எக்ஸ் பதிவு:

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில், சூர்யா மற்றும் திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்துள்ளனர். இந்த் படமானது நீதி, தெய்வீகம், ஆக்ஷன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இது சூர்யாவிற்கு மிக பிரம்மாண்ட ஹிட் படமாக அமையும் என கூறப்படுகிறது. இதற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மீண்டும் சசியின் இயக்கத்தில் விஜய் ஆண்டனி.. வெளியானது ‘நூறு சாமி’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

தேர்தல் தேதி அறிவிப்பிற்காக இப்படக்குழு காத்திருந்த நிலையில், தேர்தல் எப்போது என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கருப்பு படக்குழு ரிலீஸ் தேதி அறிவிப்பதில் தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் வைரலாகிவரும் தகவலின்படி கருப்பு படம் வரும் 2026 மே 15ம் தேதியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இது குறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us