AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Suriya: ராக்கிங் சாய்… பவழ மல்லி வீடியோ பாடலை பாராட்டிய சூர்யா!

Suriya Praises Pavazha Malli Song: இளம் இசையமைப்பாளராக ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்துவருபவர் சாய் அபயங்கர். இவரின் இசையமைப்பில் இன்டீ பாடலாக சமீபத்தில் வெளியாகியிருந்ததுதான் பவழ மல்லி. இந்த பாடல் இணையத்தில் ட்ரெண்டிங் லிண்ட்டில் இருக்கும் நிலையில், இப்பாடலையும், பாடல் குழுவையும் நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

Suriya: ராக்கிங் சாய்… பவழ மல்லி வீடியோ பாடலை பாராட்டிய சூர்யா!
பவழ மல்லி பாடலைப் பாராட்டிய சூர்யாImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 16 Mar 2026 18:05 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ், தெலுங்கு போன்ற தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் தயாராகிவருகிறது. அந்த வகையில் இவரின் நடிப்பில் மக்களால் வெளியீட்டிற்கு எதிர்பார்க்கப்பட்டுவரும் படம் கருப்பு (Karuppu). இந்த படத்தை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி (RJ. Balaji) இயக்க, ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் என்ற நிறுவனமானது தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் ஜோடியாக நடிகை திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து கிட்டத்தட்ட 10 மாதங்களை கடந்தும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை. இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் தயாரான நிலையில், இதிலிருந்து God Mode என்ற முதல் பாடல் மட்டுமே கடந்த 2025 தீபாவளியை முன்னிட்டு வெளியிடப்பட்டிருந்தது. இந்த பாடல் தற்போதுவரையிலும் இணையத்தில் வைரலாகிவருகிறது.

படங்களில் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், ஆல்பம் பாடல்களுக்கும் சாய் அபயங்கர் இசையமைத்துவருகிறார். அந்த வகையில் இவரின் இசையமைப்பில் சமீபத்தில் வெளியான ஆல்பம் பாடல்தான் “பவழ மல்லி” (Pavazha Malli). கடந்த 2026 மார்ச் 5ம் தேதியில் இப்பாடல் வெளியான நிலையில், இணையத்தில் ட்ரெண்டிங் லிண்ட்டில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் இப்பாடலை நடிகர் சூர்யா பாராட்டியுள்ளார்.

இதையும் படிங்க: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை சோபனா?

பவழ மல்லி பாடலை பாராட்டி சூர்யா தெரிவித்த விஷயம் :

நடிகர் சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பவழ மல்லி பாடலை பகிர்ந்து, “ராக்கிங் சாய் என்றும், பவழ மல்லி பாடல் குழுவிற்கு பாராட்டுக்கள்” என தெரிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் வெளியிட்ட பவள மல்லி பாடல் குறித்த எக்ஸ் பதிவு:

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கட்சி சேர என்ற ஆல்பம் பாடலின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானார். ஒரு ஆண்டிற்கு இரண்டு பாடல் என்ற விதத்தில், ஆல்பம் அதாவது ஆல்பம் பாடல்களை வெளியிட்டுவருகிறார். இந்நிலையில் இந்த 2026ம் ஆண்டில் இவர் வெளியிட்ட முதல் ஆல்பம் பாடல்தான் பவழ மல்லி. இதில் சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து பாடியுள்ளனர்.

இதையும் படிங்க: 20 வயது வித்தியாசத்திலும் காதல்… வெளியானது சூர்யா- மமிதா பைஜூவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் டீசர்!

மேலும் சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹர் இணைந்து நடனமாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2026 மார்ச் 5ம் தேதியில் இப்பாடல் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது பல மில்லியன் பார்வைகளை கடந்து இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் சாய் அபயங்கர், தொடர்ந்து அல்லு அர்ஜுன், கார்த்தி, தனுஷ், ராகவா லாரன்ஸ் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்கும் பணியில் தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us