AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Sai Abhyankkar: அதற்காக மட்டுமே நான் பாடல்களை உருவாக்க நினைக்கவில்லை – சாய் அபயங்கர்!

Sai Abhyankkar About Reels Trending: பிரபல இளம் இசையமைப்பாளராக தென்னிந்திய மக்கள் மத்தியில் பேசப்பட்டுவருபவர் சாய் அபயங்கர். இவர் தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்துவரும் நிலையில், தனது பாடல் அமைப்புகள் வெறும் ரீல்காக மட்டும் அல்ல என தெளிவுடப்படுத்தியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sai Abhyankkar: அதற்காக மட்டுமே நான் பாடல்களை உருவாக்க நினைக்கவில்லை – சாய் அபயங்கர்!
சாய் அபயங்கர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 15 Mar 2026 16:00 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்கள் மத்தியில், இளம் இசையமைப்பாளராக படமங்களில் கலக்கிவருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவரின் இசையமைப்பில் இதுவரை 2 படங்கள் மட்டுமே வெளியாகியிருந்தாலும், இரண்டு பட பாடல்களுமே சூப்பர் ஹிட் என்றே கூறலாம். மேலும் தமிழில் வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில், இவரின் இசையமைப்பில் வெளியான பாடல்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. அந்த வரிசையில் தனுஷ் (Dhanush) முதல் அல்லு அர்ஜுன் (Allu Arjun) வரை தென்னிந்திய பிரபலங்களின் படங்ககளுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். திரைப்படங்களில் மட்டும் பணியாற்றாமல் தனியாக ஆல்பம் பாடலையும் இவர் உருவாக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில்சமீபத்தில் இவரின் இன்டீ பாடலாக வெளியானதுதான் “பவழ மல்லி” (Pavazha Malli). இது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் சாய் அபயங்கர் மற்றும் கயாடு லோஹர் இருவருமே இணைந்து நடனமாடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய சாய் அபயங்கர், தனது பாடல்களுக்கான தேவைகள் மற்றும் இணையத்தில் ரீல்காக பாடல் வைரலாகுவது பற்றியும் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: பவன் கல்யாணின் மாஸ் ஆக்‌ஷன் காட்சிகளுடன் வெளியான உஸ்தாத் பகத் சிங் பட ட்ரெய்லர் – கொண்டாடும் ரசிகர்கள்

தனது இசையமைப்பு பாடல்கள் குறித்து சாய் அபயங்கர் பேச்சு:

அந்த நேர்காணலில் பேசிய சாய் அபயங்கர், “ஒரு 30 வினாடி ரீல்தான், ஒரு மொத்த பாடலின் தரத்தையும் தீர்மானிக்கிறது என்பது எனக்கு பயத்தை கொடுக்கிறது. வெறும் ரீலுக்காக மட்டுமே பாடல்களை நான் உருவாக்கவில்லை. ஆனால் பாடலில் ஒரு ஹூக் பகுதி இருக்க வேண்டும். நான் எனது பாடல் தயாரிப்பில் மற்றும் போஸ்ட்லூட்களுக்கு கவனம் செலுத்தினேன்.

இதையும் படிங்க: விடுதலை படத்தின் ஷூட்டிங்கிலேயே வெற்றிமாறன் அரசன் படத்தின் கதையை கூறினார் – விஜய் சேதுபதி சொன்ன விசயம்

அதனால் அந்த முழு பாடலும் அனைவராலும் விரும்பப்படும். உதாரணமாக பவழ மல்லி பாடலில் ‘சிக்குனு சிக்குனு வரலே’ என்ற வரிகள் ரீல்களில் வைரலானது. ஒரு பாடலில் எந்தப் பகுதியை விரும்புகிறார்கள் என்பதை, எப்போதும் பார்வையாளர்கள்தான் முடிவு செய்கிறார்கள்” என அதில் அவர் தெரிவித்திருந்தார்.

பவழ மல்லி பாடல் குறித்து சாய் அபயங்கர் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களுக்கு இசையமைக்க தொடங்கியுள்ளார். இவரின் இசையமைப்பில் பான் இந்திய பிரம்மாண்ட படமாக தயாராகிவருவது AA22. அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணி படத்திற்கு இவர் இசையமைக்கும் நிலையில், 2027ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதையடுத்து கார்த்தி, சூர்யா, தனுஷ் போன்ற பிரபலங்களின் படங்களுக்கும் இவரே இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us