AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டொவினோ தாமஸ் நடிப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது காட்டுச் செண்பகம் வீடியோ பாடல்!

Kaattuchembakam Video Song | நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் பள்ளிச்சட்டம்பி. இந்தப் படத்திலிருந்து முன்னதாக வெளியான காட்டுச் செண்பகம் என்ற வீடியோ பாடல் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

டொவினோ தாமஸ் நடிப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது காட்டுச் செண்பகம் வீடியோ பாடல்!
பள்ளிச்சட்டம்பிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 14 Mar 2026 20:57 PM IST

மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருகிறார் நடிகர் டொவினோ தாமஸ். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் மலையாள சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் மலையாள சினிமாவில் அடுத்தடுத்து 5 படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் அடுத்தடுத்தப் படம் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.

அந்த வகையில் அடுத்ததாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் பள்ளிச்சட்டமி. நடிகர் டொவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் நடிகை கயடு லோஹர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

10 மில்லியன் பார்வைகளைக் கடந்தது காட்டுச் செண்பகம் வீடியோ பாடல்:

இந்தப் பள்ளிச்சட்டம்பி படத்தை இயக்குநர் டிஜோ ஜோஷ் ஆண்டனி எழுதி இயக்கி உள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து இருந்த நிலையில் படத்தில் இருந்து சமீபத்தில் காட்டுச் செண்பகம் என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு வெளியிட்டு இருந்தது. அந்த பாடல் வீடியோ தற்போது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இது குறித்து நடிகர் டொவினோ தாமஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Rashmika Mandanna: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!

நடிகர் டொவினோ தாமஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Heartin: மடோனா செபஸ்டியன் மற்றும் நிதி அமைச்சரின் மகள் நடித்த ஹார்ட்டின் பட டீசர் வெளியானது!

Follow Us