AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Rajendra Prasad: எம்ஜிஆர் குறித்துப் பேச எனக்கு தைரியம் இருக்கா? மன்னிப்புக்கேட்ட தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்!

Rajendra Prasad Apologizes For MGR Remarks: தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் சில காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கிவந்தார். அந்த வகையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் பழம்பெரும் நடிகர் எம்ஜிஆர் பற்றி அவர் தவறாக பேசியிருந்த நிலையில், தற்போது அதற்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rajendra Prasad: எம்ஜிஆர் குறித்துப் பேச எனக்கு தைரியம் இருக்கா? மன்னிப்புக்கேட்ட தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்!
எம்.ஜி.ஆர் மற்றும் ராஜேந்திர பிரசாத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 13 Mar 2026 16:30 PM IST

டோலிவுட் சினிமாவில் மூத்த நடிகராக இருந்துவருபவர் ராஜேந்திர பிரசாத் (Rajendra Prasad). இவர் சில காலமாக தொடர் சர்ச்சைகளில் சிக்கிவருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. திரைப்பட நிகழ்வுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் தெரிவித்த கருத்துக்கள் அவரை சிக்கலில் சிக்க வைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில், தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர் (MGR) குறித்து தகாத கருத்துக்களை தெரிவித்தார். தமிழ் மக்கள் மத்தியில் எம்ஜிஆர் அன்புக்குரிய நடிகரும், அரசியல் கட்சி தலைவரும் என்ற நிலையில், திரைப்பட பிரபலங்கள், தமிழ் மக்கள் நடிகர் ராஜேந்திர பிரசாத் மீது, கடும் கோபத்தில் இருந்தனர். மேலும் பல நடிகர்களும் இவரை விமர்சித்து கண்டனம் எழுப்பியிருந்தனர்.

மேலும் ராஜேந்திர பிரசாத்தின் நடத்தைக்கு சமூக ஊடகங்களில் அவர்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த சூழலில், தற்போது இந்த சர்ச்சைக்கு பதிலளித்த நடிகர் ராஜேந்திர பிரசாத், மன்னிப்பு கேட்டு தனது வார்த்தைகளுக்கு விளக்கம் அளித்தார். அவர் தமிழில் பேசி மன்னிப்புக்கேட்ட வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: கென் படம் எடுக்கப்போறேன்-னு சொன்னதும் ஷாக் ஆகிட்டேன்.. நா அவரை சுத்தமா நம்பள – தனுஷ் ஓபன் டாக்!

எம்ஜிஆர் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்புக்கேட்டு நடிகர் ராஜேந்திர பிரசாத் பேச்சு:

அந்த வீடியோவில் பேசிய நடிகர் ராஜேந்திர பிரசாத், “நான் அந்த நிகழ்ச்சியில் பேசும்போது வேண்டுமென்றே எதுவும் பேசவில்லை. தமிழ் சினிமா ரசிகர்களைப் போலவே, நானும் எம்.ஜி.ஆரை ஒரு கடவுளாக கருதுகிறேன். அந்த நிகழ்ச்சியில் எம்ஜிஆர் சார் பற்றி ஜாலியாக பேசும்போது, தவறுதலாக சில வார்த்தைகள் வந்துவிட்டது. ஆனால் அது வேண்டுமென்றே செய்யப்படவில்லை. இந்தப் பிரச்சினையை சிலர் பெரிதாக மாற்றிவிட்டார்கள்.

இதையும் படிங்க: விஜய் குறித்த கேள்வி.. பதில் சொல்லாமல் வேக வேகமாக நடந்த திரிஷா!

அவரைப் பற்றி கருத்து தெரிவிக்க எனக்கு தைரியம் இருக்கிறதா? நான் சென்னை திரைப்பட நிறுவனத்தில் படிக்கும்போது, அவர்தான் அங்கு முதல்வராக இருந்தார். நாங்கள் நடிப்பை எவ்வாறு கற்றுக்கொள்கிறோம் என வந்து எங்களைப் பார்ப்பார். இவ்வளவு சிறந்த நபரைப் பற்றி நான் தகுதியானவன் இல்லை. எனது கருத்துக்கள் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எனது வாழ்க்கையிலே இனிமேல் இதுபோன்ற நான் பேசமாட்டேன்” என்று அவர் கூறியுள்ளார்.

எம்ஜிஆர் குறித்து தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட வீடியோ பதிவு:

ராஜேந்திர பிரசாத்தின் கருத்துகளுக்கு தமிழ் நடிகர்கள் விஷாலும் நாசரும் ஏற்கனவே பதிலளித்துள்ளனர். ராஜேந்திர பிரசாத் எம்.ஜி.ஆரை தவறாக பேசியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அவரது கருத்துக்கள் ஒவ்வொரு தமிழ் மக்களின் மனதைப் புண்படுத்தியிருந்தது.ராஜேந்திர பிரசாத் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என கண்டனம் தெரிவித்திருந்தனர். அதை ஒட்டி தற்போது ராஜேந்திர பிரசாத் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us