Anushka Shetty: திருமணத்திற்கு கிரீன் சிக்னல் காட்டிய அனுஷ்கா ஷெட்டி.. யாரை திருமணம் செய்கிறார் தெரியுமா?
Anushka Shetty Marriage: தென்னிந்திய சினிமாவில் லீட் கதாநாயகியாக பிரம்மாண்ட திரைப்படங்களை கொடுத்துவருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் 44வது வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் தனது திருமணத்தில் கவனம் செலுத்திவருவதாக கூறப்படுகிறது. மேலும் இவர் தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளாராம்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக நடித்துவருபவர் அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty). உச்ச நடிகர்களுக்கே டப் கொடுக்கும் விதத்தில் மிக பிரம்மாண்ட படங்களில் கதாநாயகியாக நடித்துவருகிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக காதி (Gaati) என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2025ம் ஆண்டில் வெளியான இப்படம் இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்தாகவும் புது திரைப்படங்களில் நடித்துவந்தார். இந்நிலையில் மேலும் சமீப காலமாக இவர் பெரிதாக எந்த படங்களிலும் ஒப்பந்தமாகவில்லையாம். இவர் தற்போது தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணத்திற்கு தன்னை தயார் செய்துவருவதாக கூறப்படுகிறது.
இவர், வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தது. இதற்கிடையில், அனுஷ்காவின் திருமணம் குறித்து பல்வேறு செய்திகள் நீண்ட காலமாகவே பரவி வருகின்றன. அவர் தனது குடும்பத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளார் என கூறப்படுகிறது.




இதையும் படிங்க: 8 ஆண்டுக்கு முந்தைய தனிப்பட்ட உரையாடல்… நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை – ராஷ்மிகா மந்தனா அதிரடி!
காதி படம் குறித்து நடிகை அனுஷ்கா ஷெட்டி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#GhaatiReleaseGlimpse OUT NOW🥰🥰🥰🥰🥰🥰
▶️Watch Here: https://t.co/4v3bsbGKMHVICTIM. CRIMINAL. LEGEND
Witness her journey 🔥🎟️Book Now tickets now:https://t.co/E5QUb1xuxt |https://t.co/u8YurWH28A#GHAATI GRAND RELEASE WORLDWIDE ON 5th SEPTEMBER 2025.@iamVikramPrabhu
🎥… pic.twitter.com/TJn6VmuCDw— Anushka Shetty (@MsAnushkaShetty) September 4, 2025
நடிகை அனுஷ்காவின் திருமணம் :
சமீப ஆண்டுகளாக நடிகை அனுஷ்கா பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்வதாகவும், பிரபல மருத்துவரை ஒருவரை திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் இணையத்தில் பரவிவந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் அனுஷ்காவின் திருமணம் குறித்த வதந்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. அனுஷ்காவின் திருமணம் இந்த 2026ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது என்ற செய்திகள் வைரலாகி வருகின்றன. தற்போது இவருக்கு 44 வயதான நிலையில், திருமணத்திற்கு கிரீன் சிக்கினல் காட்டியுள்ளாராம்.
இதையும் படிங்க: ரஜினிகாந்த் சார் எனது கதாபாத்திரத்தை பாராட்டினார் – சுராஜ் வெஞ்சாரமூடு!
அனுஷ்காவின் வீட்டில் திருமணம் குறித்து அழுத்தம் இருக்கும் நிலையில், அவர் அதற்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு தொழிலதிபரை அனுஷ்கா திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற பேச்சு உள்ளது. இரு குடும்பங்களும் சம்மதம் இருக்கும் நிலையில், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அனுஷ்கா சிறிது காலமாக படங்களில் இருந்து விலகி இருக்கிறார். இப்போது அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது இவரின் திருமணம் தொடர்பான தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பேசப்பட்டுவருகிறது.