Anushka Shetty : அது ஒரு அழகான நினைவு.. பர்ஸ்ட் லவ் குறித்து மனம் திறந்த அனுஷ்கா ஷெட்டி!
Anushka Shetty Talks About Her First Love : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகப் படங்களில் நடித்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாயிருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது முதல் காதல் குறித்து அனுஷ்கா ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அது என்ன என்பதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.

நடிகை அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty), தெலுங்கு சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியிருந்தாலும், தமிழில் தளபதி விஜய் (Thalapaty Vijay) முதல் சூர்யா (Suriya) வரை பல பிரபலங்களுடன் திரைப்படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இவர் கடந்த 2005ம் ஆண்டு வெளியானர் சூப்பர் (Super) என்ற படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார். நடிகர் நாகார்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்து தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் வரவேற்பை அடுத்து இவருக்கும், பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. மேலும் இவர் தமிழில் அறிமுகமான படம் ரெண்டு (Rendu). இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சிறப்புக் கதாபாத்திரமாக நடித்திருந்தார். இந்த படமானது நல்ல வரவேற்பை அவருக்கு கொடுத்தது. பின் தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் (Vettaikaran)படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
தற்போது வரை சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் காதி (Ghaati). இப்படத்தின் புரோமோஷன் தொடர்பாக நடிகை அனுஷ்கா ஷெட்டி சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதில் பேசிய அவர், தனது பள்ளிப் பருவ முதல் காதல் குறித்துப் பேசியுள்ளார்.




முதல் காதல் குறித்துப் பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி :
அந்த நேர்காணலில் பேசிய நடிகை அனுஷ்கா ஷெட்டி பள்ளி பருவத்தில் நடந்த முதல் காதல் பற்றிப் பேசியிருக்கிறார். அவர் அதில், “நான் ஆறாம் வகுப்பு படித்தபோது, ஒரு பையன் என்னிடம் வந்து, நான் உன்னைக் காதலிக்கிறேன் எனக் கூறினான். அப்போது அந்த வயதில் எனக்கு அது சரியா?அல்லது தவறா என்பது கூட தெரியாது. நானும் அந்த பையனிடம் சரி எனக் கூறி காதலை ஏற்றுக்கொண்டேன்.
இதையும் படிங்க :முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!
எனக்கு அந்த நினைவுகள் எப்போதும் மிகவும் இனிமையானவைதான். எனது வாழ்க்கையில் மறக்கமுடியா ஒன்றாக இருந்து வருகிறது” என நடிகை அனுஷ்கா ஷெட்டி ஓபனாக பேசியிருந்தார்.
காதி திரைப்படம் ஒத்திவைப்பு :
Team #GHAATI pic.twitter.com/UhUtWuMR6g
— UV Creations (@UV_Creations) July 5, 2025
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50வது திரைப்படமாக உருவாகியிருப்பது காதி. இப்படத்தை இயக்குநர் க்ரிஷ் ஜாகர்லமுடி இயக்கியுள்ளார். அனுஷ்காவின் 50வது படத்தில் அவருக்கு ஜோடியாகத் தமிழ் நடிகர் விக்ரம் பிரபு நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவரும் தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நடிகை சாய் பல்லவி இந்தியில் அறிமுகம் ஆகும் படத்தின் ரிலீஸ் தேதி இதோ
இந்த காதி படமானது போதைப் பொருள் கடத்தல் குறித்த கதைக்களத்துடன் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படமானது ஆரம்பத்தில் 2025, ஜூலை 11ம் தேதியில் வெளியாகும் எனக் கூறப்பட்ட நிலையில், எடிட்டிங் தாமதமான காரணத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.