Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalapathy Vijay : நீங்க இல்லனா.. விஜய்யை பற்றி பிக் பாஸ் ராஜு நெகிழ்ச்சி

Bigg Boss Raju Talk About Thalapathy Vijay : சின்னதிரை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பிக்பாஸ் ராஜு. இவரின் நடிப்பில் பான் பட்டர் ஜாம் படமானது ரிலீசிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியின் போது ராஜு, தளபதி விஜயை பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். அது பற்றிப் பார்க்கலாம்.

Thalapathy Vijay  : நீங்க இல்லனா.. விஜய்யை பற்றி பிக் பாஸ் ராஜு நெகிழ்ச்சி
பிக் பாஸ் ராஜு மற்றும் தளபதி விஜய்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 08 Jul 2025 22:11 PM

தமிழ் சினிமாவில் சின்னதிரை மூலம் சினிமாவில் நுழைந்த நடிகர்கள் பலரும் இருக்கின்றனர், அதில் ஒருவர்தான் பிக் பாஸ் ராஜு (Bigg Boss Raju). இவரின் நிஜ பெயர் ராஜு ஜெயமோகன் (Raju Jayamohan). இவர்  விஜய் டிவியில் ஆரம்பத்தில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு நடந்த பிக் பாஸ் சீசன் 5 (Bigg Boss 5) நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின் அந்த சீஸனின் வெற்றியாளராகவும் டைட்டிலை தட்டி சென்றார். இதனைத் தொடர்ந்து இவர் நடித்திருந்த படம்தான் பான் பட்டர் ஜாம் (Ban Butter jam). இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் (Raghav Mirdath) இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படமானது வரும் 2025, ஜூலை 18ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், பிக் பாஸ் ராஜூவை நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) சமீபத்தில் சந்தித்து, பாராட்டியிருந்தார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில், இந்த பான் பட்டர் ஜாம் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய நடிகர் ராஜு. தளபதி விஜயை பற்றி உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தார். இது தற்போது தளபதி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க :ஜெய் பீம் படம் குறித்து மனம் திறந்து பேசிய நடிகை லிஜோமோல் ஜோஸ்!

பிக் பாஸ் ராஜு பேசி வீடியோ பதிவு :

தளபதி விஜய் பற்றிப் பேசிய பிக் பாஸ் ராஜு :

அந்த நிகழ்ச்சியில் பேசிய பிக் பாஸ் ராஜு, என்னைப் பலரும் ஹீரோ என கூறுகிறார்கள், “என்னை வச்சி படம் எடுத்த தயாரிப்பாளரை காப்பாத்திட்டேனா அன்று, நான் ஹீரோ என ஒத்துக்கொள்கிறேன். மேலும் ஒருத்தர் ஒரே போன் காலில் இங்க படத்தை தமிழ் நாடு முழுவதும் இருக்கும் அனைவரையும் திருப்பி பார்க்க வைத்துவிட்டார். அவரு வேற யாருமில்லை தளபதி விஜய்தான். தளபதி விஜய் ஒரு போன் கால் எனக்கு பண்ணிப் பேசினார், அப்போது அவர் என்னை எப்படி பார்க்கிறார்?, அவருக்கு என்னை பிடிக்குமா? பின் எந்த விசயத்திற்காக என்னை வாழ்த்தினார், என்பது எல்லாம் எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது என்றே கூறலாம்.

இதையும் படிங்க :கோலமாவு கோகிலா படத்தில் முகத்தில் கால் வைத்த நயன்தாரா.. யோகி பாபு சொன்ன சம்பவம்!

அவர் சொன்ன விஷயம்தான் இன்றைக்கு , நிறைய பேருக்கு எங்க படத்தைப் பற்றி தெரிஞ்சிருக்கு. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின் போது, தளபதி விஜய் அவரின் ரசிகர்களிடம்”நீங்க எல்லாம் இல்லனா நான் என்ன பண்ண போறேன்னு தெரியலப்பா” என கூடியிருந்தார். அதைபோல் நானா அவரிடம் சொல்கிறேன், ” நீங்க இல்லனா நான் என்ன பண்ணுவேன்னு தெரியலண்ணா” என பிக் பாஸ் ராஜு ஓபனாக மேடையில் பேசியிருந்தார்.