AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!

Kara Movie Story Leak: தனுஷ் மற்றும் போர் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் கர. இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

Kara Movie: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் கதை இதுவா? இணையத்தில் கசிந்த தகவல்!
கர திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 10 Mar 2026 16:33 PM IST

கோலிவுட் சினிமாவையும் கடந்து தென்னிந்திய மக்கள் மத்தியில் முற்றிலும் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகள் மட்டுமில்லாமல் இந்தி மொழியிலும் படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவருக்கு பான் இந்திய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று கூறலாம். இவரின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் “கர” (Kara). இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, வருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்கியுள்ளார். இவர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் இணைந்து நடித்து ஹிட் கொடுத்திருந்த, போர் தொழில் என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த கர படமானது முற்றிலும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள நிலையில், வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெறும் நிலையில், தற்போது இப்படத்தின் கதைக்களம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

இதையும் படிங்க: KH x RK படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும்? வைரலாகும் தகவல்

தனுஷின் கர திரைப்படத்தின் கதைக்களம் இதுவா:

இணையத்தில் கசிந்த பதிவில், இந்த கர திரைப்படம், “வன்முறை மற்றும் போராட்டங்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு நபர், மீண்டும் ஆபத்தான சூழ்நிலைக்குள் சிக்கிக்கொள்கிறான். எதிரிகள் சுற்றி வரும்போது, அவன் கடந்த காலத்தில் எடுத்த முடிவுகள் அனைத்தும் இப்போது விலை கேட்க ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு மோதலும் உயிர் பிழைப்பதற்கான சவாலாக மாறுகிறது.

இதையும் படிங்க: பள்ளியில் காதலித்தவர்களை தேடிச் செல்லும் நாயகன், நாயகி – ஓடிடியில் வெளியாகி உள்ள வித் லவ் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ

இந்த போராட்டத்தில் அவனை காப்பாற்றப் போவது அவன் துணிச்சல், உள்ளுணர்வு மற்றும் தனது செயல்களின் விளைவுகளை நேராக எதிர்கொள்ளும் மனப்பக்குவம்” போன்ற கதைக்களத்தில் இப்படமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இப்படம் ஆரம்பத்தில் அதிரடி திரில்லர் மற்றும் பழிவாங்கும் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது வித்த்தியாசமான் கதையில் தயாராகியுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. எது உண்மை என தெரியவில்லை.

தனுஷின் கர திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

இந்த கர படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 2026 மார்ச் இறுதி முதல் இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தனுஷ் மற்றும் மமிதா பைஜுவுடன் நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருக்கும் நிலையில், மிக பிரம்மாண்டமான படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us