Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Dhanush

Dhanush

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடக்கத்தில் இவர் தோற்றம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த போதும் அதனை முறியடித்து தனது அசாத்தியமான நடிப்பாற்றலால் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்கிறார். நடிகர், பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், என பன்முகம் கொண்டவர் தனுஷ். தான் தடம் பதித்த எல்லா துறைகளிலும் திறம்பட செயல்பட்டு தனது முத்திரையை பதித்திருக்கிறார் தனுஷ். தனது நடிப்பு திறமையால் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் கலக்கி வருகிறார். மேலும் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் பல திறமைமிக்க கலைஞர்களை தமிழ் சினிமாவிற்கு அளித்திருக்கிறார். சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆடுகளம் மற்றும் அசுரன் ஆகிய படங்களுக்காக வாங்கியிருக்கிறார். மேலும் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை காக்கா முட்டை மற்றும் விசாரணை ஆகிய படங்களுக்காக வாங்கியிருக்கிறார்.

Read More

Tere Ishq Mein: தனுஷ் மற்றும் கிருதி சனோனின் ‘தேரே இஷ்க் மே’.. வெளியானது செகண்ட் சிங்கிள்..!

Tere Ishq Mein Movie: தனுஷ் , இயக்குநர் ஆனந்த் எல் ராய் கூட்டணியில் 3-வது திரைப்படமாக உருவாகியிருப்பதுதான் தேரே இஷ்க் மே. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துவரும் நிலையில், முதல் பாடல் சில நாட்களுக்கு முன் வெளியானது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்திலிருந்து யூஸி கெஹ்னா என்ற 2வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

D55: தனுஷின் டி55 படத்தில் இவர்தான் ஜோடியா?.. இசையமைப்பாளர் யார் தெரியுமா?

D55 Movie Update: தென்னிந்திய சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் இட்லி கடை என்ற படமானது சமீபத்தில் வெளியான நிலையில், தொடர்ந்து டி54 படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தை அடுத்ததாக அமரன் பட இயக்குநரின் இயக்கத்தில் இவர் நடிக்கும் படம் டி55.

தனுஷின் 55-வது படம் எப்படி இருக்கும்? இணையத்தில் கசிந்த தகவல்

Dhanush 55 Movie Update: தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது 55-வது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். மேலும் இந்தப் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Dhanush: எனது மகன்களும் அதை செய்யவேண்டும்.. அதுதான் எனக்கு பெருமை – தனுஷ் சொன்ன விஷயம்!

Dhanush About His Sons: பான் இந்திய பிரபல நாயகனாக இருந்துவருபர் தனுஷ். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக பேசிய நேர்காணல் ஒன்றில், தனது மகன்களை நினைத்து எப்போது பெருமைப்படுவேன் என்பது குறித்து விவரமாக தெரிவித்துள்ளார்.

ஓடிடியில் வெளியாகியுள்ள இட்லி கடை படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Idli Kadai Movie: நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் இட்லி கடை. இந்தப் படத்தை நடிகர் தனுஷே எழுதி இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது என் பாட்டன் சாமி வீடியோ சாங்!

Yen Paattan Saami Varum Video Song | நடிகர் தனுஷின் இட்லி கடை படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து என் பாட்டன் சாமி வரும் பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Silambarasan: எனக்கு தனுஷ் எதிரியா? அதில் மட்டும்தான் அவர் எனக்கு போட்டி- சிலம்பரசன் பகிர்ந்த விஷயம்!

Silambarasan About Dhanush: தமிழில் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சிலம்பரசன். இவரின் நடிப்பில் தமிழில் தொடர்ந்து திரைப்படங்கள் உருவாகிவருகிறது. அந்த வகையில் முன்பு நேர்காணல் ஒன்றில் பேசிய சிலம்பரசன் தனக்கும், தனுஷிற்கு இருக்கும் நட்பு மற்றும் போட்டி குறித்து ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

தனுஷின் ‘இட்லி கடை’ ஒடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Idlikadai Ott release: தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தின ஒடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனுஷின் 52வது படமான இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலையும் குவித்தது. அதோடு, சமீபத்தில் வெளியான படங்களில் குடும்பமாக சென்று பார்க்கும் திரைப்படம் என்ற அங்கீகாரத்தையும் இப்படம் பெற்றதால், திரையரங்கில் பேஃமிலி ஆடியன்ஸ் குவிந்தனர்.

Tere Ishq Mein: ஆக்‌ஷன் ஹீரோவாக தனுஷ்… ‘தேரே இஷ்க் மெய்ன்’ பட முதல் பாடல் ரிலீஸ்!

Tere Ishq Mein First Song: உச்ச நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளை படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் தனுஷ் நடித்துவந்த இந்தி படம்தான் தேரே இஷ்க் மெய்ன். இப்படமானது 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகும் நிலையில், தீபாவளியி முன்னிட்டு இன்று முதல் பாடலை வெளியிட்டுள்ளது.

இட்லி கடை படத்திலிருந்து வெளியானது எஞ்சாமி தந்தானே வீடியோ பாடல்

Enjaami Thandhaane Video Song : நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் இட்லி கடை. இந்த இட்லி கடை படத்தில் வெளியான எஞ்சாமி தந்தானே என்ற பாடலின் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

Selvaraghavan: கருப்பு சாமியும் கன்று குட்டியும் கலங்க வைக்கிறது.. இட்லி கடையை பாராட்டிய செல்வராகவன்!

Selvaraghavan Praises Idli kadai Movie : தென்னிந்திய பிரபல நடிகர் மற்றும் இயக்குநராக இருந்துவருபவர் செல்வராகவன். இவரின் நடிப்பிலும், இயக்கத்திலும் புதிய படங்கள் உருவாகிவரும் நிலையில், நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தை இயக்கியது குறித்து தனுஷை பாராட்டி பதிவிட்டுள்ளார்

Harish Kalyan: ‘அந்த காட்சியில் அழுகை வந்துடுச்சு’.. வெளிப்படையாக பேசிய ஹரிஷ் கல்யாண்!

Harish Kalyan About Idli Kadai Movie: கோலிவுட் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் ஹரிஷ் கல்யாண். இவரின் நடிப்பில் லப்பரப்பந்து படத்தை தொடர்ந்து, வெளியீட்டிற்கு தயாராகியுள்ள படம் டீசல். இப்படத்தின் தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியவர், தனுஷின் இட்லி கடை படம் குறித்து பேசியுள்ளார்.

நீண்ட நாளுக்கு பின் மீண்டும் இணையும் தனுஷ் – அனிருத்.. எந்த படத்தில் தெரியுமா?

Dhanush And Anirudh Reunion: தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவரின் நடிப்பில் தமிழில் படங்ககள் உருவாகிவருகிறது. இந்நிலையில் பல நாட்களுக்கு பின் மீண்டும் அனிருத் இசையில் புதிய படத்தில் இணையவுள்ளாராம். அது பற்றி பார்க்கலாம்.

தனுஷ் – செல்வராகவன் யாருக்கு சேட்டை அதிகம்… கஸ்தூரி ராஜா சொன்ன விசயம்

Kasthuri Raja: தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் கஸ்தூரி ராஜா. இவரது இயக்கத்தில் வெளியான பலப் படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இவரது மகன்கள் தனுஷ் மற்றும் செல்வராகவன் இருவரும் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

D55 Movie: தனுஷ் – ராஜ்குமார் பெரியசாமியின் டி55 படத்தின் சூப்பர் அப்டேட்!

Dhanush D55 Shooting Update: ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், தனுஷ் இணைந்து நடிக்கவுள்ள படம்தான் டி55. இப்படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2024ம் ஆண்டில் நடந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பமாகும் என்பது தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது. அது குறித்து பார்க்கலாம்.